அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin
Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது போட்டி: 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி



பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டித் தொடரை நியூசிலாந்து 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.   3 டெஸ்ட் கொண்ட தொடர் 1- 1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.  



  6 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்திலும், 3- வது போட்டியில் பாகிஸ்தான் 43 ரன்னிலும் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.   பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது.


“டாஸ்” வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.   நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்தது. பிராங்ளின் 75 பந்தில் 7 பவுண்டரியுடன் 62 ரன்னும், நாதன் மேக்குல்லம் 58 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரி 1சிக்சர்) எடுத்தனர்.    

பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ் 3 விக்கெட்டும், அப்ரிடி, முகமது ஹபீஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.  

263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் நிதானமாக ரன்களை சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ஹபீஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அகமது ஷேஷத் 42 ரன்கள் சேர்த்தார்.   பின்னர் களமிறங்கிய யூனுஸ்கான் 42 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

யூனுஸ்கானுக்கு பிறகு ஆடியவர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதிகபட்சமாக மிஸ்பா-உல்-ஹக் ஆட்டமிழக்காமல் 93 ரன் எடுத்தார்.   இதனால் 49 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன் எடுத்து பாகிஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

நியூசிலாந்து தரப்பில் ஸ்டைரிஸ் 3 விக்கெட்டுகளையும், பெநெட், வெட்டோரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  

93 ரன் எடுத்த மிஸ்பா-உல்-ஹக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  

இதனால் 6 போட்டிகளை கொண்ட தொடரில் 2- 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

பாக். வீரர்கள் சச்சினைப் பார்த்து கற்றுக் கொள்ளட்டும்: ஜாவித் மியான்தத்


பாக். கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைப் பார்த்து கற்றுக் கொள்ளட்டும் என்று முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் டைரக்டர் ஜெனரலுமான ஜாவித் மியான்தத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மைதானத்தில் வீரர்கள் செய்யும் சாதனை தான் அவர்களைப் பற்றிக் கூற வேண்டும். ஆனால் பாக். வீரர்கள் தங்களைப் பற்றி தானே மீடியாக்களில் பெருமையாகப் பேசுகின்றனர். 

மீடியாக்களில் சில வீரர்கள் தாங்கள் எப்படியெல்லாம் விளையாடுவோம் என்பதைப் பெரிய அளவில் விவரிக்கிறார்கள். ஆனால் களத்தில் ஒன்றையும் காணோம். இது நாட்டிற்கு தலைகுனிவாக உள்ளது.

அவர்களுக்கு நான் ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டியையும் முக்கியமாகக் கருத வேண்டும். குறிப்பாக விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அனைவரும் கிரிக்கெட் என்பது மைதானத்தில் விளையாடுவது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

தன்னைப் பற்றி தானே பேசும் அவர்கள் எல்லாம் சச்சினைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். சென்சுரி மேல் சென்சுரி அடிக்கும் சச்சின் தனது திறமையைப் பற்றிப் பெருமையாகப் பேசி யாருமே கேட்டதில்லை என்று அவர் கூறினார்.

ஐ.சி.சி.உறுதி : சூதாட்ட வீரர்கள் மீது வழக்கு தொடரும்


லண்டன்: "பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. இவர்கள் மீது வழக்கு தொடர்வது உறுதி,'' என, ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூண் லார்கட் தெரிவித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்டில், பாகிஸ்தானின் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகிய மூன்று வீரர்கள் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டது அம்பலமானது.
  
இதையடுத்து இவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தற்காலிகமாக தடைசெய்தது. இதை எதிர்த்து இவர்கள் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பு, வரும் ஜனவரி மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில் சூதாட்டம் குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூண் லார்கட் கூறுகையில்,"" பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இவைகளை கடினமான முயற்சிக்குப் பின் சேகரித்துள்ளோம்.

இந்த வீரர்கள் மீது வழக்குத் தொடர்வது உறுதி. முடிவில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், தகுந்த தண்டனை வழங்கப்படும். பொதுவாக நாங்கள் எல்லோரையும் சமமாகவே நடத்த விரும்புகிறோம். அதேநேரம், இதுபோன்ற விஷயங்களில், யாருக்கும் கருணை காட்டமாட்டோம்,'' என்றார்.

வக்கீல் கண்டனம்: லார்கட்டின் இந்த கருத்துக்கு சல்மான் பட் வக்கீல் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காலித் ரஞ்ஜா கூறுகையில்,"" லார்கட்டின் கருத்து, வீரர்களின் அப்பீல் குறித்து விசாரிக்கும் அமைப்பை, மிரட்டுவது போல உள்ளது,'' என்றார்.