அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

ஐ.சி.சி.உறுதி : சூதாட்ட வீரர்கள் மீது வழக்கு தொடரும்


லண்டன்: "பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. இவர்கள் மீது வழக்கு தொடர்வது உறுதி,'' என, ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூண் லார்கட் தெரிவித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்டில், பாகிஸ்தானின் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகிய மூன்று வீரர்கள் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டது அம்பலமானது.
  
இதையடுத்து இவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தற்காலிகமாக தடைசெய்தது. இதை எதிர்த்து இவர்கள் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பு, வரும் ஜனவரி மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில் சூதாட்டம் குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூண் லார்கட் கூறுகையில்,"" பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இவைகளை கடினமான முயற்சிக்குப் பின் சேகரித்துள்ளோம்.

இந்த வீரர்கள் மீது வழக்குத் தொடர்வது உறுதி. முடிவில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், தகுந்த தண்டனை வழங்கப்படும். பொதுவாக நாங்கள் எல்லோரையும் சமமாகவே நடத்த விரும்புகிறோம். அதேநேரம், இதுபோன்ற விஷயங்களில், யாருக்கும் கருணை காட்டமாட்டோம்,'' என்றார்.

வக்கீல் கண்டனம்: லார்கட்டின் இந்த கருத்துக்கு சல்மான் பட் வக்கீல் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காலித் ரஞ்ஜா கூறுகையில்,"" லார்கட்டின் கருத்து, வீரர்களின் அப்பீல் குறித்து விசாரிக்கும் அமைப்பை, மிரட்டுவது போல உள்ளது,'' என்றார்.


0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!