அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

மேலத்தெரு கிரிக்கெட்டில் AFCC அணி தோல்வியை தழுவியது

WCC Tournament - 2013

- காலிறுதி ஆட்டமாக AFCC vs வேதாரண்யம் ஆகிய அணிகள் மோதினர்.

- வேதாரண்யம் அணியினர் டாஸில் வென்று முதலில் மட்டைப்பணியை தேர்வு செய்தனர். 

- வேதாரண்யம் அணியினர் தனது மட்டைப்பணியை மிக சிறப்பாக வெளிப்படுத்தினர்.

- AFCC அணியினரின் பந்து வீச்சை நாலத்திசைகளிலும் சிதறடித்தனர் ஆக இறுதியில் வேதாரண்யம் அணி பெற்ற மொத்த ரன்கள் 159/7 - 20 ஓவர்கள்.

- எளிய இலக்கை எட்டிவிடலாம் என்று AFCC அணியினர் தனது துவக்க ஆட்டக்காரர்களாக இஸ்மாயில் மற்றும் ஹக்கீம் இருவரையும் களமிறக்கியது மிக சிறப்பாக துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடி பின்பு பிரிந்தது LBW என்ற முறையில் ஹக்கீம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

- ஹக்கீமை தொடர்ந்து நிஜாஸ்,தமீம்,சமீம்,தீனுல் ஹக் என்று அடுத்தடுத்து AFCC அணி விக்கெட் சரிவை கண்டது மறுமுனையில் துவக்க ஆட்டக்காரர் இஸ்மாயில் பொறுப்புடன் களத்தில் இருந்தார்.

- பின்பு களமிறங்கிய இம்ரான் இஸ்மாயிலுடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் பொறுப்புடனும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடினர்.

- இஸ்மாயில் ஆஃப் கவர் திசையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திருப்பினார் அவரை தொடர்ந்து மேலும் AFCC அணி விக்கெட் சரிவை தொடங்கியது மறுமுனையில் இம்ரானின் அதிரடியான ஆட்டம் நமக்குதான் வெற்றி அனைவராலும் கூறப்பட்டதுக்கிணங்க ஆட்டத்தை மிக சுலபமாக மாற்றினார் ஆனால் அவரும் அடிக்க முற்பட்டதும் கிளின் போல்ட் என்ற முறையில் வெளியேறினார்.

- இறுதியில் வேதாரண்யம் கை ஓங்கவே இறுதியில் ஜெயித் மற்றும் ரஷீத் (Left) இறுதி விக்கெட்டாக களத்தில் இருந்ததும் எளிய இலக்குடன் (12பந்துகளில் 13ரன்கள் தேவை)

-ரஷீத் தனது இறுதி விக்கெட்டையும் பறிகொடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது AFCC அணியினர்.

-!rf!-

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!