பாக். கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைப் பார்த்து கற்றுக் கொள்ளட்டும் என்று முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் டைரக்டர் ஜெனரலுமான ஜாவித் மியான்தத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மைதானத்தில் வீரர்கள் செய்யும் சாதனை தான் அவர்களைப் பற்றிக் கூற வேண்டும். ஆனால் பாக். வீரர்கள் தங்களைப் பற்றி தானே மீடியாக்களில் பெருமையாகப் பேசுகின்றனர். மீடியாக்களில் சில வீரர்கள் தாங்கள் எப்படியெல்லாம் விளையாடுவோம் என்பதைப் பெரிய அளவில் விவரிக்கிறார்கள். ஆனால் களத்தில் ஒன்றையும் காணோம். இது நாட்டிற்கு தலைகுனிவாக உள்ளது.
அவர்களுக்கு நான் ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டியையும் முக்கியமாகக் கருத வேண்டும். குறிப்பாக விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அனைவரும் கிரிக்கெட் என்பது மைதானத்தில் விளையாடுவது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.தன்னைப் பற்றி தானே பேசும் அவர்கள் எல்லாம் சச்சினைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். சென்சுரி மேல் சென்சுரி அடிக்கும் சச்சின் தனது திறமையைப் பற்றிப் பெருமையாகப் பேசி யாருமே கேட்டதில்லை என்று அவர் கூறினார்.







