அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

ஒருநாள் தொடரை கைப்பற்றிய அணிகள்


கோப்பை வென்றது இலங்கை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது

இலங்கை சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இரண்டு போட்டியின் முடிவில் இலங்கை அணி 1-0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டி கொழும்புவில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

சங்ககரா அரைசதம்:
முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு உபுல் தரங்கா (39), தில்ஷன் (30) ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. பின்னர் இணைந்த கேப்டன் சங்ககரா (75), மகிலா ஜெயவர்தனா (44) ஜோடி நம்பிக்கை அளித்தது. மாத்யூஸ் (36*) ஓரளவு கைகொடுக்க, இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பென் 4, டுவைன் பிராவோ 2, ராம்பால் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கெய்ல் ஏமாற்றம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் (0), அட்ரியன் பரத் (0) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. பின்னர் இணைந்த டேரன் பிராவோ (79), சர்வான் (51) ஜோடி நம்பிக்கை அளித்தது. அடுத்து வந்த டுவைன் பிராவோ (32), கார்ல்டன் பாக் (49) ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 49 ஓவரில் 251 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 4, பெரேரா 3, பெர்ணான்டோ 2, ஹெராத் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
----

கோப்பை வென்றது ஆஸி.,: இங்கிலாந்து பரிதாபம்

பெர்த் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 57 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதையடுத்து 6-1 என தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, கோப்பை வென்று அசத்தியது.


ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் ஆறு போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலிய அணி 6-1 என தொடரை வென்று இருந்தது. கடைசி மற்றும் ஏழாவது போட்டி நேற்று பெர்த்தில் நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் காமிரான் ஒயிட், பேட்டிங் தேர்வு செய்தார்.
வோஜஸ் அபாரம்:
ஆஸ்திரேலிய அணிக்கு பெய்னே (5), ஹாடின் (27), பெர்குசன் (15) சுமாரான துவக்கம் கொடுத்தனர். கேப்டன் ஒயிட் 24 ரன்கள் எடுத்தார். டேவிட் ஹசி அரைசதம் (60) அடித்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வோஜஸ் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து ஏமாற்றம்:
சற்று கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், டேவீஸ் இருவரும் "டக்' அவுட்டாகி ஏமாற்றினர். டிராட் (14), பீட்டர்சன் (26), பெல் (8) ஆகியோரும் கைவிட்டனர். பிரையர் (39), லுகே ரைட் (24) நிலைக்கவில்லை. கடைசி வரை களத்தில் இருந்த யார்டியின் (60*) போராட்டமும் கைகொடுக்கவில்லை. இறுதியில் 44 ஓவரில் இங்கிலாந்து அணி, 222 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோல்வியடைந்தது. 

இதையடுத்து 6-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி கோப்பை வென்று அசத்தியது. ஆட்ட மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வோஜஸ், வாட்சன் தட்டிச் சென்றனர்.
உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதியவும்

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!