அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin
Showing posts with label யுவராஜ்சிங். Show all posts
Showing posts with label யுவராஜ்சிங். Show all posts

உலககோப்பையை கைப்பற்றுவோம்: யுவராஜ்சிங் நம்பிக்கை


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவ ரான யுவராஜ்சிங் கூறிய தாவது:-

தற்போதுள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலம் நிறைந்ததாக திகழ்கிறது. இதனால் இந்த அணி உலக கோப்பையை கைப்பற்ற முடியும் என்று நம்புகிறோம். இதேபோல ஆஸ்திரேலிய, தென்ஆப்பிரிக்கா அணி களும் சிறந்தவை.

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கி லாந்து ஆகிய நாடுகளும் சவாலானது. 2003- ம் ஆண்டு உலக கோப்பை மிக சிறந்ததாக இருந்தது. அதில் இறுதிப்போட்டி வரை நுழைந்தோம். 2007- ம் ஆண்டு உலக கோப்பை சரியாக அமையவில்லை. இந்த முறை முற்றிலும் மாறுப்பட்ட அணி விளையாடுகிறது.

 எந்த அணிக்கு எதிராகவும் நாங்கள் சவாலாக விளையாடக் கூடியவர்கள். பேட்டிங் சாதகம் இந்திய ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதக மாக இருக்கும். பந்து வீச்சாளர்கள் விக்கெட் டுகளை எடுக்க கடுமையாக போராட வேண்டும்.

தெண்டுல்கருக்காக உலக கோப்பையை நாங் கள் கைப்பற்றுவோம். ஷேவாக், யூசுப்பதான் முக்கிய பங்களிப்பார்கள். தென்ஆப்பிரிக்கா தொடரில் நான் ஒரு ஆட்டத்தில் மட்டுமே சிறப்பாக ஆடினேன். அதை போக்கும் வகையில் உலக கோப்பையில் நன்றாக ஆடுவேன். இவ்வாறு யுவராஜ்சிங் கூறியுள்ளார்.