அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

யூசுப் பதான் கைகொடுப்பார்: கபில்தேவ்

உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு "ஆல்-ரவுண்டர்' யூசுப் பதான் கைகொடுப்பார்,'' என, முன்னாள் கேப்டன் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையை கைப்பற்றிய கேப்டன்கள் பங்கேற்ற நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் கிளைவ் லாயிட் (வெஸ்ட்இண்டீஸ் 1975, 1979), கபில்தேவ் (இந்தியா 1983), ஆலன்பார்டர் (ஆஸ்திரேலியா 1987), இம்ரான்கான் (பாகிஸ்தான் 1992), ரனதுங்கா (இலங்கை 1996), ஸ்டீவ்வாக் (ஆஸ்திரேலியா 1999) ஆகியோர் பங்கேற்றனர்.  

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து, கடந்த 1983ல் இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை பெற்றுத் தந்த கபில்தேவ் கூறியதாவது: உலக கோப்பை தொடரில் மிகவும் கவனிக்கப்பட கூடிய வீரராக யூசுப் பதான் விளங்குவார். இவரது "பார்ம்' இந்திய அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும். நீண்ட நேரம் களத்தில் இருக்கும் பட்சத்தில், இவரை அவுட்டாக்குவது மிகவும் கடினம். "மிடில்-ஆர்டரில்' இவரது பங்களிப்பு திருப்பம் ஏற்படுத்தும். இக்கட்டான நிலையில் சிறப்பாக செயல்படும் திறமை படைத்த இவர், இந்திய அணிக்கு சிறந்த "ஆல்-ரவுண்டராக' வலம் வருவார் என நம்புகிறேன்.

உலக கோப்பை போட்டியில் யூசுப்பதான் முக்கிய பங்கு வகிப்பார். அவர் 6-வது அல்லது 7-வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தின் தன்மையை மாற்றக்கூடியவர். தோல்வி பாதையில் இருக்கும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்லக் கூடிய திறமையை பெற்றவர். யூசுப்பதான் களத்தில் இருக்கும் வரை எதிர் அணியின் நிலை திண்டாட்டம் தான்.   யூசுப்பதானின் இந்த அதிரடி ஆட்டத்துக்கு 20 ஓவர் போட்டித்தான் காரணம். 20 ஓவர் போட்டியில் எந்த வீரரும் எந்த வரிசையில் வந்தும் பேட்டிங் செய்ய முடியும்.

"டுவென்டி-20' போட்டிகளின் வரவால், பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது எந்த ஒரு வீரரும், எந்த ஒரு இடத்திலும் களமிறங்கி பேட்டிங் செய்ய தகுதி பெற்றுள்ளனர்.

தோனி, காம்பிர் மற்றும் சில முன்னாள் வீரர்கள் சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறு. சச்சின் மட்டும் கிரிக்கெட் விளையாடவில்லை. கிரிக்கெட் என்பது அணியாக விளையாடப்படும் விளையாட்டு. இவ்வாறு கூறுவது மற்ற 14 வீரர்களையும் இழிவு படுத்துவது போன்றது. சச்சின் சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இம்முறை எந்த அணி உலக கோப்பை வெல்லும் என்பதை தற்போது கூற இயலாது. ஏழு அணிகளுக்கு உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன். இதில் இந்திய அணியும் ஒன்று. இதுவரை தொடரை நடத்திய அணி, கோப்பை வென்றதில்லை. இம்முறை அதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!