அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

South Africa take series despite Yusuf blitz - யூசுப் பதான் அதிரடி சதம் வீண் *இந்தியா மீண்டும் தோல்வி * கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா

South Africa 250 for 9 (Amla 116*, van Wyk 56, Munaf 3-50) beat India (Yusuf 105, Morkel 4-52) by 33 runs by the D/L method


பரபரப்பான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. யூசுப் பதானின் அதிரடி சதம் வீணானது. தொடரை 3-2 என வென்ற தென் ஆப்ரிக்கா, கோப்பை கைப்பற்றியது.




தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் 2-2 என சமமாக இருந்தன. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று செஞ்சுரியனில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.

ஸ்மித் ஏமாற்றம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், ஆம்லா துவக்கம் கொடுத்தனர். ஸ்மித் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். பின் ஆம்லாவுடன், இணைந்த வான் விக் (56), சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3வது அரைசதம் கடந்து வெளியேறினார்.

ஆம்லா அபாரம்:
அடுத்து வந்த டிவிலியர்ஸ் (11) நிலைக்கவில்லை. மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆம்லா. ஜாகிர் கான் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய ஆம்லா, ஹர்பஜன் பந்திலும் விளாசினார். ஆம்லா (116) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 7வது சதம் கடந்தார்.

மழை குறுக்கீடு:
தென் ஆப்ரிக்க அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. பின் 46 ஓவர்களாக மாற்றப்பட்டு போட்டி துவங்கியது. இம்முறை இந்திய வீரர்கள், விக்கெட் மழை பொழிந்தனர். டுமினி (35), டு பிளசிஸ் (8) தாக்குப்பிடிக்கவில்லை. போத்தாவும் 2 ரன்னில் திரும்பினார். பீட்டர்சன் (4), ஸ்டைன் (0), மார்கல்(0) மூன்று வீரர்களும், ஜாகிர் கானின் ஒரே ஓவரில் அவுட்டாகினர். தென் ஆப்ரிக்க அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் முனாப் படேல் 3, ஜாகிர் கான், யுவராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

விக்., சட, சட...
"டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி மாற்றப்பட்ட (46 ஓவரில் 268 ரன்கள்) கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, வழக்கம் போல "டாப் ஆர்டர்' வீரர்கள் சொதப்பினர். உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் இருந்த ரோகித் சர்மா (5), கடந்த போட்டியில் அசத்திய விராத் கோஹ்லி (2) ஏமாற்றினர். தோனி 5, யுவராஜ் 8 என, ஒற்றை இலக்க ரன்னில் வந்த வேகத்திலேயே திரும்பினர்.

பார்த்திவ் ஆறுதல்:
இளம் பார்த்திவ் படேல் சற்று ஆறுதலாக ரன்கள் சேர்த்தார். ஸ்டைன், டிசோட்சபே, மார்கல் என அனைவரது பந்திலும் பவுண்டரிகள் விளாசினார். இவர் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் வந்த ஹர்பஜன் 13 ரன்கள் எடுத்தார். பியுஸ் சாவ்லாவும் (8) வாய்ப்பை வீணாக்கினார்.

அதிரடி சதம்:
இந்திய அணி 119 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்து திணறியது. இந்நிலையில் ஜாகிர் கானுடன் சேர்ந்த யூசுப் பதான், அதிரடியாக ரன்கள் குவித்தார். மார்கலில் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய இவர், போத்தாவின் ஓவரில் 2 சிக்சர் விளாசினார். தொடர்ந்து டிசோட்சபே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து, 68 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் அரங்கில் 2வது சதம் ஆகும். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், யூசுப் பதான் 105 ரன்களுக்கு (8 சிக்சர், 8 பவுண்டரி) அவுட்டாக, இந்திய அணியின் வெற்றிக் கனவு சிதைந்தது. கடைசியில் ஜாகிர் கானும் (24) கைவிட, இந்திய அணி 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்காவில் மார்கல் 4, ஸ்டைன், டிசோட்சபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஆம்லா தட்டிச் சென்றார்.
இதையடுத்து 3-2 என்ற கணக்கில் தொடரை வென்ற தென் ஆப்ரிக்க அணி, கோப்பை வென்று அசத்தியது. தொடர் நாயகன் விருது மார்கலுக்கு வழங்கப்பட்டது.

புரியாத கணக்கு
கிரிக்கெட்டில் மழை பெய்யும் போதெல்லாம், கொண்டு வரப்படும் "டக்வொர்த் லீவிஸ்' விதி, எப்படி என்பதே புரியாத கணக்காக உள்ளது. நேற்றும் அப்படித்தான் நடந்தது. தென்ஆப்ரிக்கா 46 ஓவரில் 250/9 ரன்கள் எடுத்தது. ஆனால் இதே 46 ஓவரில் இந்தியாவுக்கு இலக்காக 268 ரன்கள் என மாற்றப்பட்டது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

தோனியின் தவறான முடிவு
நேற்று "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் செய்வதென்று தவறாக முடிவெடுத்தார். இதனைப் பயன்படுத்திய தென்ஆப்ரிக்க வீரர்கள் ரன்மழை பொழிந்தனர். இதேபோல பேட்டிங் வரிசையில், இவர் முன்னதாக களமிறங்கியதும் பலன் தரவில்லை. இதனால் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன் முறையாக, ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கைநழுவியது.

டிசோட்சபே அதிகம்
இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்ரிக்காவின் டிசோட்சபே அதிகபட்சமாக 13 விக்கெட் கைப்பற்றினார். 
5 போட்டியில் அதிக விக்., வீழ்த்திய "டாப்-5' வீரர்கள்:

டிசோட்சபே(தெ.ஆப்.,)    13
மார்கல்(தெ.ஆப்.,)    12
முனாப் படேல் (இந்தியா)    11
ஜாகிர் கான் (இந்தியா)    9
ஸ்டைன் (தெ.ஆப்.,)    8

ஆம்லா முதல்வன்
பேட்டிங்கின் முதல் இரு இடங்களில் தென் ஆப்ரிக்க வீரர்கள் ஆம்லா (250), டுமினி (244) உள்ளனர். கடந்த 5 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த "டாப்-5' வீரர்கள் விபரம்:
வீரர்/அணி ரன்கள்
ஆம்லா (தெ.ஆப்.,)    250
டுமினி (தெ.ஆப்.,)    244
கோஹ்லி (இந்தியா)    193
யூசுப் பதான் (இந்தியா)    166
ஸ்மித் (தெ.ஆப்.,)    156


InningsDot balls4s6sPP1PP2PP3Overs 41-46NB/Wides
South Africa12122053/127/0 (10.1 - 15)20/1 (41.1 - 44)38/60/5
India15124949/3 (0.1-9)25/3 (9.1 - 14)34/1 (34.1 - 38)0/12/7

2 comments:

  1. நல்ல ஆரோக்கியமான பதிவு... வெல்டன் ! தொடரட்டும்...

    ReplyDelete
  2. அபு இப்ராஹிம் அவர்களுக்கு நன்றி

    உங்களின் வருகையும் தாங்களின் நண்பர்கள் வருகையும் தொடரட்டும்

    இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!