அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin
Showing posts with label இந்திய அணி. Show all posts
Showing posts with label இந்திய அணி. Show all posts

இந்திய அணி கோப்பை வெல்ல வாய்ப்பு - வெங்சர்க்கார் நம்பிக்கை


"கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின், உலக கோப்பை வெல்லும் திறமையுடைய அணியை இந்தியா பெற்றுள்ளது<. ஆனால் இது அதிரடி வீரர் யுவராஜ் சிங், 'ஆல் ரவுண்டர்' யூசுப் பதான் ஆட்டத்தை பொறுத்து அமையும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் பிப்., 19ம் தேதி தாகாவில் துவங்குகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. இதுகுறித்து வெங்சர்க்கார் (54) கூறியது:

கடந்த 1983 தொடரின் போது இந்திய அணி சரியான நேரத்தில் எழுச்சி கண்டது. லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வென்றது தான், வீரர்களுக்கு அதிகப்படியான தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் சிறப்பான பார்மில் இருந்ததால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினோம். அதாவது துவக்கத்தில் இருந்தே வெற்றிபெறும் மனநிலையில் இருந்தோம். 

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில், போட்டியன்று சிறப்பாக விளையாட வேண்டியது முக்கியம். எப்படிப்பட்ட சிறந்த அணியாக இருந்தாலும், மோசமாக விளையாடினால், பின் மீண்டு வருவது என்பது மிகவும் கடினம். இப்படித்தான், வெல்ல முடியாத அணி என்ற பெருமை கொண்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 1983ல் வீழ்ந்தது.

கறுப்பு குதிரைகள்:
அப்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் தான் "நம்பர்-1'. தவிர, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் கோப்பை வெல்லும் போட்டியில் முன்னணியில் இருந்தன. இந்நிலையில் கறுப்புக் குதிரைகளாக நாங்கள் தொடரில் பங்கேற்றோம். முதன் முதலாக கேப்டன் பொறுப்பில் இருந்த கபில் தேவ், ஒட்டுமொத்தமாக அணியை சிறப்பாக வழிநடத்தினார். 

தவிர, கபில் தேவ், பல்வீந்தர், மதன் லால், ரோஜர் பின்னி, அமர்நாத் ஆகியோர் இங்கிலாந்தில் கிளப் போட்டிகளில் பங்கேற்று நல்ல அனுபவம் பெற்றிருந்தனர். இதில் அமர்நாத், கீர்த்தி ஆசாத் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தேவையான நேரங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான லீக் போட்டியின் போது, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த எனக்கு, தாடையில் அடிபட்டது. இதனால் ஏழு தையல்கள் போடப்பட்டு, போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமானது. இருப்பினும், இந்திய வீரர்கள் எழுச்சி கண்டு கோப்பை வென்று அசத்தினர். 

சிறந்த அணி: 
இதேபோல, தற்போது உலகிலுள்ள சிறந்த அணிகளில் இந்தியாவும் ஒன்று. தவிர, சொந்த மண்ணில் போட்டிகளில் பங்கேற்பதும் மிகப்பெரிய பலம். கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, இம்முறை கோப்பை வெல்லும் போட்டியில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 1987ல் தொடரின் போதும் அணி சிறப்பாகத்தான் இருந்தது. ஆனால் அரையிறுதியில் தோற்க நேரிட்டது. 

ஜொலிக்க வேண்டும்:
இப்போதைய அணியில் சச்சின், சேவக், காம்பிர், யுவராஜ் சிங், யூசுப் பதான் என, முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர். அதிரடி வீரர்களான யுவராஜ் சிங் அல்லது யூசுப் பதான் இருவரில் ஒருவர், இந்திய அணிக்கு முக்கிய ஆயுதமாக இருப்பார்கள். இந்தியா கோப்பை வெல்வது இவர்கள் கையில் தான் உள்ளது. இவர்கள் ஜொலிக்கும் பட்சத்தில் கோப்பை வெல்வது எளிதாகும்.

சுழலுக்கு வாய்ப்பு:
இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் கடந்த மார்ச் மாதம் முதல், வெயிலில் நன்கு காய்ந்து உலர்ந்து கிடக்கிறது. இதனால், ஆடுகளம் இந்திய சுழற் பந்து வீச்சாளர்களுக்கு நன்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். தவிர, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது. 
இவ்வாறு வெங்சர்க்கார் கூறினார்.

யூசுப் பதானை கட்டுப்படுத்துவது கடினம் *ஒப்புக்கொள்கிறார் தென் ஆப்ரிக்கா பயிற்சியாளர்


"தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியில் மிரட்டி, அசத்தலான சதம் விளாசிய, இந்தியாவின் யூசுப் பதானை கட்டுப்படுத்துவது கடினம்,'' என்கிறார் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளர் வான் ஜில். 

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. செஞ்சுரியனில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் என, இந்தியா தடுமாறிய நிலையில் எழுச்சி கண்ட யூசுப் பதான், அதிரடியாக சதம் விளாசி அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். இதுகுறித்து தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் வான் ஜில் கூறியது:

இந்தியாவுக்கு எதிரான தொடரில், "பவுன்சர்கள்' முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைத்தோம். டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் இதை அருமையாக சமாளித்தனர். ஆனால் ஒருநாள் தொடரில் சொதப்பினர். இதனால் தான் மார்கல், டிசோட்சபே இருவரும் இந்திய அணியின் "டாப் ஆர்டரை' தகர்த்து, அதிக விக்கெட் வீழ்த்த முடிந்தது. 
துணிச்சல் போராட்டம்:

இந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து அதிக பாடம் கற்றுள்ளோம். நாங்கள் செய்த தவறுகளால் 1-2 என பின்தங்கி, பிறகு தொடரை வென்றோம். இந்தியா டெஸ்ட் தரவரிசையில் "நம்பர்-1' இடத்தில் உள்ள அணி. இந்நிலையில் அவர்களிடம் இருந்து, அதிக போராட்டத்தை நாங்கள் எதிர்பார்க்க வில்லை என்பது மிகவும் கேலிக்கூத்தானது.இதை ஏற்கனவே எதிர்பார்த்து தான் இருந்தோம். ஆனால், எதிர்பார்ப்பை விட சற்று கூடுதலாகவே, போராட்டம் இருந்தது. இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து, கடைசி வரை துணிச்சலாக போராடினர். இருப்பினும் தொடரை வென்றது, உலக கோப்பை தொடரை உற்சாகமாக துவக்க உதவும்.
கட்டுப்படுத்த முடியாது:

இந்தியாவின் யூசுப் பதான் அதிரடியான வீரர். செஞ்சுரியன் போட்டியில் இவரும், ஜாகிர் கானும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரது சில "ஷாட்டுகள்' நம்பமுடியாத வகையில் இருந்தது. இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தோல்வி உறுதியாகி இருந்தது. ஆனால் யூசுப் பதான் போட்டியை எங்களிடம் இருந்து கொண்டு செல்ல இருந்தார். நல்லவேளையாக மார்கல் கைகொடுத்தார். உலக கோப்பை தொடரில் யூசுப் பதானை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். 
மாறும் ஆடுகளங்கள்:

உலக கோப்பை வெல்லும் அணிகளில் முதலிடத்தில் இருப்பது இந்தியா தான். ஏனெனில், சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது என்பது கடினமான காரியம். இரண்டாவதாக இலங்கையை குறிப்பிடலாம். அடுத்து, சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியும் போட்டியில் உள்ளது. இந்தியாவில் ஆடுகளங்கள் நிலையில்லாத தன்மை கொண்டவை. ஒருநாள் போட்டிகளின் போது, திடீரென மாறும் இயல்புள்ளது. அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதைப் பொறுத்து, உலக கோப்பை தொடரின் வெற்றி அமையும்.
இவ்வாறு வான் ஜில் கூறினார்.

South Africa take series despite Yusuf blitz - யூசுப் பதான் அதிரடி சதம் வீண் *இந்தியா மீண்டும் தோல்வி * கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா

South Africa 250 for 9 (Amla 116*, van Wyk 56, Munaf 3-50) beat India (Yusuf 105, Morkel 4-52) by 33 runs by the D/L method


பரபரப்பான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. யூசுப் பதானின் அதிரடி சதம் வீணானது. தொடரை 3-2 என வென்ற தென் ஆப்ரிக்கா, கோப்பை கைப்பற்றியது.




தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் 2-2 என சமமாக இருந்தன. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று செஞ்சுரியனில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.

ஸ்மித் ஏமாற்றம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், ஆம்லா துவக்கம் கொடுத்தனர். ஸ்மித் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். பின் ஆம்லாவுடன், இணைந்த வான் விக் (56), சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3வது அரைசதம் கடந்து வெளியேறினார்.

ஆம்லா அபாரம்:
அடுத்து வந்த டிவிலியர்ஸ் (11) நிலைக்கவில்லை. மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆம்லா. ஜாகிர் கான் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய ஆம்லா, ஹர்பஜன் பந்திலும் விளாசினார். ஆம்லா (116) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 7வது சதம் கடந்தார்.

மழை குறுக்கீடு:
தென் ஆப்ரிக்க அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. பின் 46 ஓவர்களாக மாற்றப்பட்டு போட்டி துவங்கியது. இம்முறை இந்திய வீரர்கள், விக்கெட் மழை பொழிந்தனர். டுமினி (35), டு பிளசிஸ் (8) தாக்குப்பிடிக்கவில்லை. போத்தாவும் 2 ரன்னில் திரும்பினார். பீட்டர்சன் (4), ஸ்டைன் (0), மார்கல்(0) மூன்று வீரர்களும், ஜாகிர் கானின் ஒரே ஓவரில் அவுட்டாகினர். தென் ஆப்ரிக்க அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் முனாப் படேல் 3, ஜாகிர் கான், யுவராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

விக்., சட, சட...
"டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி மாற்றப்பட்ட (46 ஓவரில் 268 ரன்கள்) கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, வழக்கம் போல "டாப் ஆர்டர்' வீரர்கள் சொதப்பினர். உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் இருந்த ரோகித் சர்மா (5), கடந்த போட்டியில் அசத்திய விராத் கோஹ்லி (2) ஏமாற்றினர். தோனி 5, யுவராஜ் 8 என, ஒற்றை இலக்க ரன்னில் வந்த வேகத்திலேயே திரும்பினர்.

பார்த்திவ் ஆறுதல்:
இளம் பார்த்திவ் படேல் சற்று ஆறுதலாக ரன்கள் சேர்த்தார். ஸ்டைன், டிசோட்சபே, மார்கல் என அனைவரது பந்திலும் பவுண்டரிகள் விளாசினார். இவர் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் வந்த ஹர்பஜன் 13 ரன்கள் எடுத்தார். பியுஸ் சாவ்லாவும் (8) வாய்ப்பை வீணாக்கினார்.

அதிரடி சதம்:
இந்திய அணி 119 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்து திணறியது. இந்நிலையில் ஜாகிர் கானுடன் சேர்ந்த யூசுப் பதான், அதிரடியாக ரன்கள் குவித்தார். மார்கலில் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய இவர், போத்தாவின் ஓவரில் 2 சிக்சர் விளாசினார். தொடர்ந்து டிசோட்சபே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து, 68 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் அரங்கில் 2வது சதம் ஆகும். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், யூசுப் பதான் 105 ரன்களுக்கு (8 சிக்சர், 8 பவுண்டரி) அவுட்டாக, இந்திய அணியின் வெற்றிக் கனவு சிதைந்தது. கடைசியில் ஜாகிர் கானும் (24) கைவிட, இந்திய அணி 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்காவில் மார்கல் 4, ஸ்டைன், டிசோட்சபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஆம்லா தட்டிச் சென்றார்.
இதையடுத்து 3-2 என்ற கணக்கில் தொடரை வென்ற தென் ஆப்ரிக்க அணி, கோப்பை வென்று அசத்தியது. தொடர் நாயகன் விருது மார்கலுக்கு வழங்கப்பட்டது.

புரியாத கணக்கு
கிரிக்கெட்டில் மழை பெய்யும் போதெல்லாம், கொண்டு வரப்படும் "டக்வொர்த் லீவிஸ்' விதி, எப்படி என்பதே புரியாத கணக்காக உள்ளது. நேற்றும் அப்படித்தான் நடந்தது. தென்ஆப்ரிக்கா 46 ஓவரில் 250/9 ரன்கள் எடுத்தது. ஆனால் இதே 46 ஓவரில் இந்தியாவுக்கு இலக்காக 268 ரன்கள் என மாற்றப்பட்டது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

தோனியின் தவறான முடிவு
நேற்று "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் செய்வதென்று தவறாக முடிவெடுத்தார். இதனைப் பயன்படுத்திய தென்ஆப்ரிக்க வீரர்கள் ரன்மழை பொழிந்தனர். இதேபோல பேட்டிங் வரிசையில், இவர் முன்னதாக களமிறங்கியதும் பலன் தரவில்லை. இதனால் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன் முறையாக, ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கைநழுவியது.

டிசோட்சபே அதிகம்
இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்ரிக்காவின் டிசோட்சபே அதிகபட்சமாக 13 விக்கெட் கைப்பற்றினார். 
5 போட்டியில் அதிக விக்., வீழ்த்திய "டாப்-5' வீரர்கள்:

டிசோட்சபே(தெ.ஆப்.,)    13
மார்கல்(தெ.ஆப்.,)    12
முனாப் படேல் (இந்தியா)    11
ஜாகிர் கான் (இந்தியா)    9
ஸ்டைன் (தெ.ஆப்.,)    8

ஆம்லா முதல்வன்
பேட்டிங்கின் முதல் இரு இடங்களில் தென் ஆப்ரிக்க வீரர்கள் ஆம்லா (250), டுமினி (244) உள்ளனர். கடந்த 5 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த "டாப்-5' வீரர்கள் விபரம்:
வீரர்/அணி ரன்கள்
ஆம்லா (தெ.ஆப்.,)    250
டுமினி (தெ.ஆப்.,)    244
கோஹ்லி (இந்தியா)    193
யூசுப் பதான் (இந்தியா)    166
ஸ்மித் (தெ.ஆப்.,)    156


InningsDot balls4s6sPP1PP2PP3Overs 41-46NB/Wides
South Africa12122053/127/0 (10.1 - 15)20/1 (41.1 - 44)38/60/5
India15124949/3 (0.1-9)25/3 (9.1 - 14)34/1 (34.1 - 38)0/12/7

இந்திய உலகக் கோப்பைக் கிரிக்கெட் அணி-சில கேள்விகள்-சில புதிர்கள்!

28 வருடங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கண் முன்பு வந்து போய்க் கொண்டிருக்கும், உலகக்கோப்பையை வெல்லப் போகும் அணி இது என்ற பெருத்த அறிமுகத்துடன் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். ஆனால் இந்த அணியின் தேர்வு சில சர்ச்சைகளையும், சில குழப்பங்களையும், சில புதிர்களையும் ஏற்படுத்தியுள்ளது - வழக்கம் போல.

மற்ற கிரிக்கெட் போட்டிகளுக்கும், உலகக் கோப்பைப் போட்டிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மற்ற கிரிக்கெட் தொடர்கள் இரு சண்டியர்களுக்கு இடையிலான மோதலாக இருந்தால், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி என்பது உலக நாயகர்களுக்கு இடையிலான மோதலாகும். ஒவ்வொருத்தரும் தீப்பொறியாக இருப்பார்கள். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒவ்வொரு அணியும் பக்காவான அணியை தேர்வு செய்தாக வேண்டும்.

அந்த வகையில், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாதுதான். இருந்தாலும் சில குழப்பங்கள் எழுந்திருப்பதை மறுக்கவும் முடியாது.

மகேந்திர சிங் டோணி தலைமையிலான இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் என்று பார்த்தால் மொத்தம் 7 பேர் (டோணியையும் சேர்த்து) இடம் பெற்றுள்ளனர். பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை 7 பேர் -நாலு பேர் வேகப் பந்து வீச்சாளர்கள், 3 பேர் ஸ்பின்னர்கள். ஆல் ரவுண்டர் ஒரே ஒருவர்தான் - அவர் யூசுப் பதான். விக்கெட் கீப்பர் டோணி மட்டுமே- ஸ்பேராக யாரும் சேர்க்கப்படவில்லை.

இதில் சச்சின், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகிய நால்வரும் பார்ட் டைம் ஸ்பின்னர்களாகவும் உள்ளனர். 

இதுதான் இந்திய அணி. முதலில் சாதக அம்சத்திற்கு வருவோம்.

டோணி கேப்டன் என்பதே முதலில் இந்தியாவுக்குப் பெரிய சாதகமான விஷயம்தான். ரன் மெஷின்களாக கருதப்படும் சச்சின், கம்பீர், ஷேவாக், சுரேஷ் ரெய்னா ஆகிய நால்வருமே அட்டகாசமான பார்மில் உள்ளனர். மேலும் ஸ்பின் பவுலிங்கை கபளீகரம் செய்வதில் வல்லவர்கள் இவர்கள். உலகக் கோப்பை போட்டிகள் நடக்கப்போகும் இந்தியா, இலங்கை, வங்கதேசம் மூன்றுமே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இடங்கள் என்பதால் இவர்களது ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். 

விராத் கோலியும் நல்ல பார்மில் இருக்கிறார். யுவராஜ் சிங்கும் பார்முக்குத் திரும்பியுள்ளார். மேலும் மு்நதைய அனுபவமும் யுவராஜுக்கு கை கொடுக்கும்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை ஜாகிர்கான் அட்டகாசமாக இருக்கிறார். அதேபோல முனாப் படேல், பிரவீன் குமார், ஆசிஷ் நெஹ்ராவும் நன்கு பந்து வீசக்கூடியவர்கள். முனாப் படேல் தென் ஆப்பிரிக்க பயணத்தில் அசத்தினார். 

ஒரே ஒரு ஆல் ரவுண்டராக அணியில்இடம் பெற்றுள்ள யூசுப் பதான் உண்மையிலையே அணிக்கு தனி வேல்யூவைக் கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பின்னி எடுத்தவர் யூசுப் பதான். அது மட்டுமல்லாமல், நெருக்கடியான நேரத்தில் பிரமாதமாக ஆடக் கூடியவரும் கூட. கேப்டன் தன் மீது வைக்கும் நம்பிக்கையை காப்பாற்றக் கடுமையாக போராடக் கூடியவர், கடினமான உழைப்பாளியும் கூட. எனவே யூசுப் பதானின் இருப்பு, இந்தியாவுக்கு நிச்சயம் பிளஸ்தான்.

சுழற்பந்து வீச்சின் கோட்டைக்குள் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறப் போவதால் ஹர்பஜன் சிங்குக்கு நிறைய வேலை. அவரும் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர். முரளிதரனே ஹர்பஜனை வெகுவாகப் பாராட்டியுள்ளார். எனக்கு அடுத்து ஹர்பஜன்தான் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.அவருக்கு உறுதுணையாக அஸ்வினும், பியூஸ் சாவ்லாவும் இருப்பார்கள் என நம்பலாம். ஐபிஎல் போட்டிகளில் பட்டாசாக பந்து வீசியவர் அஸ்வின்.

இப்போது குறைகளைப் பார்க்கலாம்.

- ஏற்கனவே நான்கு பார்ட் டைம் ஸ்பினர்கள் இருக்கும்போது எதற்காக 3 சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய தேர்வுக் குழு எடுத்தது என்பது புரியவில்லை.

- பியூஸ் சாவ்லா ஆக்டிவ் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி ரொம்பகாலமாகி விட்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்திற்கும் மேலாக எந்த பெரிய தொடரிலும் அவர் ஆடவில்லை.

- ஸ்ரீசாந்த் சமீப காலமாக பிரமாதமாக பந்து வீசி வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், முன்பை விட சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரை ஏன் சேர்க்கவில்லை என்பது புரியவில்லை, நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அவர் மீது கேப்டன் டோணி அதிருப்தியுடன் இருப்பதே காரணமாக கருதப்படுகிறது. தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார் ஸ்ரீசாந்த்.

டெஸ்ட் தொடரின்போது அவர் ஆக்ரோஷமாக பந்து வீசியதையும், எதிரணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் தொடர்ந்து, டிரஸ்ஸிங் ரூமில் வைத்து ஸ்ரீசாந்த்தை கடுமையாக டோணி திட்டியதாகவும், இதையடுத்து ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுததாகவும் செய்திகள் வெளியாகின. இதெல்லாம் சேர்ந்துதான் தற்போது ஸ்ரீசாந்த்துக்கு வேட்டு வைத்து விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

- உலகக் கோப்பைப் போட்டிகள் 3 நாடுகளில் நடைபெறவுள்ளது. நீண்ட காலம் நடைபெறும் தொடராகும் இது.அப்படி இருக்கையில் ஒரு பேக்கப் விக்கெட் கீப்பர் தேவை என்பதை ஏன் கிரிக்கெட் தேர்வுக் குழு உணரவில்லை. டோணியால் பல பொறுப்புகளையும் சமாளிக்க முடியுமா என்பதை ஏன் தேர்வுக் குழு கவனத்தில் கொள்ளத் தவறியது என்பது தெரியவில்லை. ஒன்று பார்த்திவ் படேலை எடுத்திருக்கலாம் அல்லது திணேஷ் கார்த்திக்கை தேர்வு செய்திருக்கலாம்.

- உலகக் கோப்பைப் போட்டி என்பது ஆல்ரவுண்டர்களின் ஆட்டம் என்பார்கள். காரணம், இது உச்சகட்ட போட்டி என்பதாலும், கெளரவம் சம்பந்தப்பட்டது என்பதாலும் ஆல் ரவுண்டர்கள் இருந்தால் அணிக்கு மிகப் பெரிய பலம். எனவே யூசுப் பதானைப் போல மேலும் ஒரு ஆல்ரவுண்டர் இந்தியாவுக்கு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இதெல்லாம் சின்னச் சின்னக் குறைகள். 

இந்திய அணி இடம் பெற்றுள்ள போட்டிப் பிரிவில் இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய பலம் வாய்ந்த அணிகளும், வங்கதேசமும் இடம்பெற்றுள்ளன. எனவேதான் பந்து வீச்சுக்கு இந்திய தேர்வுக்குழு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தை சமாளிப்பது மிகக் கடினமான வேலை. அதிலும் இங்கிலாந்து பயமுறுத்தும் வகையில் தற்போது ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த அணி சிறந்தது, இது கோப்பையை வெல்லும் என்று தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல கேப்டன் டோணியும் அணித்தேர்வு குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார். 

அணியைத் தேர்வு செய்தாகி விட்டது. நிறையோ, குறையோ, அதை பேசிக் கொண்டிருப்பது இனி சரியாக இருக்காது. போட்டிகள் ஆரம்பித்து, முடியும் வரை எந்த வீரரும் காயமடைந்து விடாமல் 'பிட்'டாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது ரொம்ப முக்கியமானது.

Source : Thatstamil

Yusuf shines as India win thriller -யூசுப் பதானின் மின்னல் விளாசலில் தெ. ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா


India 223 for 8 (Yusuf 59, Harbhajan 23*, Morne 3-28) beat South Africa 220 (du Plessis 60, Duminy 52) by two wickets 
யூசுப் பதானின் அபாரமான ஆட்டத்தால் 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.


கேப்டவுனில் நடந்த இப்போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 220 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்தியா களம் இறங்கியது. முன்னணி ஆட்டக்காரர்களை சொற்ப ரன்களில் இழந்து இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது.


100 ரன்களை எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்களை இந்தியா இழந்திருந்தது. அந்த சமயத்தில் வந்து சேர்ந்தார் யூசுப் பதான். நெருக்கடியான நேரத்தில் பிரமாதமாக விளையாடக் கூடியவர் என்பதை மீண்டும் நேற்று நிரூபித்தார் பதான். சுழற்பந்து வீச்சாளர்கள் ஜோஹன் போத்தா மற்றும் டுமினியின் பந்துகளைப் பதம் பார்த்த அவர் மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்தார். 


அதிரடியாக ஆடிய அவர் 50 பந்துகளில் 59 ரன்களைக் குவித்தார். பதானின் ஆட்டத்தால் பாதாளத்தில் கிடந்த இந்தியா படு வேகமாக முன்னேறி வெற்றிப் படிக்கட்டின் உச்சியை எட்டிப் பிடித்தது.


அடித்து ஆட முடியாத அளவிலான பிட்ச்சில் பதான் காட்டிய வான வேடிக்கையால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் நிலை குலைந்து போய் விட்டனர்.


பதானும், சுரேஷ் ரெய்னாவும் (37) சேர்ந்து 6 விக்கெட்டுக்கு 75 ரன்களைச் சேர்த்தனர். இருப்பினும் அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் ஹர்பஜன் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து (23) அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.


தென் ஆப்பிரிக்காவின் மார்னி மார்க்கல் 3 விக்கெட்களையும், ஸ்டெயின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆனால் பதான் போட்ட போட்டில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களால், இந்தியாவின் தடுக்க முடியவில்லை.


ஆட்டத்தின் 28வது ஓவர் வரை இந்தியாவின் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. அப்போது பதான் 6 ரன்களுடன் இருந்தார். அதன் பின்னர் பதான் விஸ்வரூபம் எடுத்து விளாச ஆரம்பித்தார். போத்தா, சோத்சோபே, டுமினி என யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை. பவுண்டரிகள் சரமாரியாக பறந்தன.அதை விட உச்சமாக போத்தாவின் ஒரு ஓவரில் 3 சிக்சர்களை விளாச போத்தா சோர்ந்து போய் விட்டார்.


ஏற்கனவே 2வது ஒரு நாள் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ஈட்டி இந்தியா அசத்தியது. இந்த நிலையில் 3வது போட்டியில் அட்டகாசமாக ஆடி அபாரமாக வென்றது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் அணி அறிவிப்பு-ஸ்ரீசாந்த், ரோஹித் நீக்கம்

உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் ஆர்.அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளன. பிப்ரவரி 18ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை ஏற்கனவே இந்தியா  அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 15 பேர் கொண்ட இறுதி அணியை இன்று அறிவித்தது இந்திய அணி தேர்வுக்குழு. ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய தேர்வாளர் குழு சென்னையில் கூடி இன்று இந்திய அணி வீரர்கள் குறித்து தீவிர ஆய்வு நடத்தியது.

இதன் இறுதியில் டோணி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இந்திய அணி விவரம்:

எம்.எஸ்.டோணி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஜாகிர் கான், பிரவீன் குமார், முனாப் படேல், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ஆர்.அஸ்வின், பியூஷ் சாவ்லா.

முரளி விஜய்-திணேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு மறுப்பு

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல திணேஷ் கார்த்திக்கும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால். அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில், டோணி மட்டுமே விக்கெட் கீப்பராக உள்ளார். 2வது விக்கெட் கீப்பர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் 7 பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மென்கள், ஒரு விக்கெட் கீப்பர், ஒரு ஆல் ரவுண்டர் (யூசுப் பதான்) இடம் பெற்றுள்ளனர்.

English summary

Indian team for WC cricket has been announced. Dhoni led Indian team was selected in Chennai on Monday. The team also include Sachin Tendulkar, Virender Sehwag, Gautam Gambhir, Yuvraj Singh, Virat Kohli, Suresh Raina, Yusuf Pathan, Zaheer Khan, Praveen Kumar, Munaf Patel, Ashish Nehra, Harbhajan Singh, Ashwin Kumar, Piyush Chawla.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி 17ம் தேதி தேர்வு

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் தேர்வாளர் குழு வருகிற 17ம் தேதி தேர்வு செய்து அறிவிக்கவுள்ளது.

ஏற்கனவே 30 பேர் கொண்ட ஒரு உத்தேச அணியை இந்திய தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அதிலிருந்து இறுதியாக செல்லப் போகும் 15 பேரை தேர்வுக் குழு அறிவிக்கவுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜனவரி 17ம் தேதி சென்னையில் நடைபெறும் தேர்வுக் கூட்டத்தில் தேர்வாளர் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்றார்.

ஐசிசியின் விதிமுறைகளுக்கு ஏற்ப அணி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

The final 15-member Indian squad for the forthcoming ICC Cricket World Cup in the sub continent will be picked by the national senior selection panel on January 17. "The selection committee is to pick the World Cup squad on the 17th at Chennai," a Cricket Board source told today. The selection panel, with Krishnamachari Srikkanth at the helm, has picked a preliminary squad of thirty members for the mega event, and the list would be pruned to the required number as per ICC regulations for the tournament.

Munaf clinches stunning win for India - முனாப் பட்டேலின் அபார பந்து வீ ச்சால் இந்திய அணி 'திரில்' வெற்றி

India 190 (Yuvraj 53, Dhoni 38, Tsotsobe 4-22) beat South Africa 189 (Smith 77, Munaf 4-29) by one run
Scorecard and ball-by-ball details


ஜோகனஸ்பர்க் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றிப்பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. டர்பனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

மந்தமான துவக்கம்:
இந்திய அணிக்கு சச்சினுடன் இணைந்து முரளி விஜய் துவக்கம் கொடுத்தார். இருவரும் ரன்கள் எடுப்பதை விட, விக்கெட்டை காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்தனர். அவ்வப்போது பவுண்டரி அடித்த முரளி விஜய் 16 ரன்களில் வெளியேறினார். விராத் கோஹ்லி (22) ரன்அவுட்டானார். 44 பந்துகளில் 24 ரன்கள் மட்டும் எடுத்த சச்சின், போத்தா சுழலில் வீழ்ந்தார்.

யுவராஜ் அரைசதம்:
அடுத்து யுவராஜ் சிங்குடன் கேப்டன் தோனி சேர்ந்தார். இருவரும் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. டிசோட்சபே பந்தில் பவுண்டரி அடித்த யுவராஜ், சர்வதேச அரங்கில் 45 வது அரைசதம் கடந்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இது 5வது அரைசதம் ஆகும். 4வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் சிங் (53) அவுட்டானார்.

21 ரன்கள், 6 விக்.,:
பின் பேட்டிங் "பவர்பிளேயிலும்' இந்திய வீரர்கள் சொதப்பினர். ரெய்னா (11) முதலில் திரும்பினார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த தோனியும் (61 பந்தில் 38 ரன்கள்) அணியை கைவிட்டார். அடுத்து வந்த ஹர்பஜன் 3, ஜாகிர் கான் "டக்' அவுட்டாகினர். 'பவர்பிளேயில்' (5 ஓவர், 14 ரன்கள்) 4 வீரர்கள் அவுட்டாகினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மாவும் (9) நிலைக்கவில்லை. நெஹ்ரா 1 ரன் எடுத்தார். முடிவில், இந்திய அணி 47.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 21 ரன்கள் எடுப்பதற்குள், இந்தியாவின் 6 வீரர்கள் அவுட்டாகி ஏமாற்றினர். தென் ஆப்ரிக்காவின் டிசோட்சபே 4, ஸ்டைன், மார்கல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

'திரில்' வெற்றி:
எளிய இலக்கை விரட்டிய தென்ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (4) ஏமாற்றினார். பின் ஸ்மித் 77 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். பின்னர் வந்த டும்னி(13), போத்தா(4) ஆகியோர் கைவிட்டனர்.  தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் முனாப் வீசிய போட்டியின் 43வது ஓவரின் 2வது பந்தில் மார்க்கல்(6) ஆவுட்டானார். இதே ஓவரின் கடைசி பந்தில் பார்னலும்(12)  ஆவுட்டாக,  தென்ஆப்ரிக்க அணி 43 ஓவரில் 189 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் "திரில்' வெற்றிப்பெற்றது.

ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முனாப் பட்டேல் தேர்வுப்பெற்றார்.

English Summary
South Africa made a mess of what should have been a comfortable chase of a below-par total at Wanderers, stumbling in the batting Powerplay and then sinking to a dispiriting defeat in a thrilling finish. In conditions less favourable for batting than what the venue has offered in the past, Graeme Smith had put South Africa on course with a positive innings but his wicket in the 33rd over triggered a collapse that was a product of panic, ill-luck and some needling Indian bowling. Munaf Patel's spell proved decisive as he dislodged Smith and ended the South African innings with two wickets in the 43rd over, when the hosts were just a shot away from victory.
The game was still South Africa's when Munaf began bowling the 43rd over. Four runs were needed with two wickets in hand but what clinched the game for India were two short-of-a-length deliveries that the tailenders, Morne Morkel and Wayne Parnell, who had batted calmly until then, felt were too good to resist. With three needed for victory, Morkel slashed one straight to the substitute fielder Yusuf Pathan at point and, off the last ball of the over, Parnell, keen to finish off the game, cut Munaf to Yuvraj Singh, sparking wild celebrations in the Indian camp while leaving South Africa shell-shocked at their sudden capitulation.
The result had seemed unlikely with Smith's assured presence at the crease. He had been ruthless in his treatment of the bad balls, which the Indians doled out more often than their opponents had earlier in the day, and had eased the pressure despite periodic breakthroughs at the other end. Munaf was punished for consecutive boundaries through mid-off and point, while Zaheer Khan was pulled through midwicket when he pitched short. Initially a little rusty against Harbhajan Singh, Smith stepped out to the offspinner to combat the turn and take the ball off a length. He kept threading the gaps in the outfield to squeeze boundaries off the seamers and went past 6000 runs in ODIs.
Smith's shaky yet productive stand with Colin Ingram, a fluent partnership with JP Duminy and an increasingly threatening association with David Miller had continued the one-way traffic set up by South Africa's bowlers. But at 152 for 4, in the second over of the batting Powerplay, a reversal began.
South Africa's bowlers had exploited the movement off the pitch in restraining India, and Munaf had managed to prise out the wicket of Hashim Amla with a delivery that nipped back in. In the 33rd over, he managed to dart one back in from outside off towards Smith, who played on. In the next over, after he had been flicked to the fine-leg boundary, Zaheer shortened his length and dismissed Miller with an offcutter that the batsman failed to pull and gloved to short fine leg. And when he returned in the 36th over, Zaheer was fortunate to dismiss Johan Botha, who was given out lbw playing back to a good-length delivery, when it seemed the ball had only made contact with the outer half of the bat, not with the pad.
Parnell calmed the nerves of a capacity Wanderers crowd with a square-cut boundary and a promising vigil with Dale Steyn. But Steyn's attempt to risk a single and retain strike for the 39th over resulted in a run-out when Yuvraj barely managed to break the stumps before the ball slipped out of his hands. From 177 for 8, Parnell and Morkel braved a determined spell from Zaheer, managed a streaky boundary off part-time offspinner Suresh Raina and took South Africa to within four runs of a 2-0 lead. Only to throw it all away in the next over from Munaf.
South Africa's bowlers may have unable to finish the job with the bat but they had impressed with disciplined bowling performance under overcast skies on a slowish track. India approached their innings cautiously and, using the movement, South Africa's bowlers capitalised on their circumspection. Lonwabo Tsotsobe was the best. His role in ODIs has largely been a containing one but his accuracy amid India's pressure to accelerate earned him his best match haul of 4 for 22. India, too, faltered in their batting Powerplay, losing four wickets for 14 runs to undermine what Yuvraj and Dhoni had achieved during their fighting recovery stand.
The pair had to build from scratch following the wickets of Sachin Tendulkar and Virat Kohli in quick succession. Displaying little signs of getting bogged down, neither batsman felt compelled to take undue risks and instead ensured a steady scoring-rate by working the field. Both used the sweep and the paddle, while Yuvraj often drove straight to pinch twos because long-on that was wider than usual. Bad balls were a rarity but Yuvraj was prompt to punish them when on offer: he slashed Morkel over point and glanced Tsotsobe to the fine-leg boundary to raise his half-century. The stand was worth 83 and with 13 more overs to go, a score of 240 was on. India didn't get that far, though given the manic developments towards the end, they didn't need to.

India level series with 87-run win


டர்பன் டெஸ்ட் போட்டியில் இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து டெஸ்ட் தொடரை சமன் செய்தது.

டர்பனில் நடந்து வந்த டெஸ்ட் போட்டியில் வெல்வது இந்தியாவுக்கு அவசியமானதாக இருந்தது. இப்போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்ய முடியும், 3வது டெஸ்ட்டில் வென்று தொடரைக் கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற நிலையில் இருந்தது இந்தியா.

அதற்கேற்ப அதன் ஆட்டமும் அமைந்தது. முதல் இன்னிங்ஸில் வழக்கம் போல குறைந்த ஸ்கோரில் சுருண்டாலும் (205), பவுலிங்கில் புலிப் பாய்ச்சல் காட்டி தென் ஆப்பிரிக்காவை 131 ரன்களில் சுருட்டி விட்டது இந்தியா.

இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியாவுக்கு முக்கிய வீரர்கள் கை கொடுக்க தவறினாலும், அனுபவம் வாய்ந்த வி.வி.எஸ்.லட்சுமண் அபாரமான ஆட்டத்தைக் காட்டி இந்தியாவை தலை நிமிரச் செய்தார். அவர் போராடி எடுத்த 96 ரன்களால் இந்தியா 2வது இன்னிங்ஸில் 228 ரன்களை எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை தென் ஆப்பிரிக்கா சந்தித்தது. 

ஆனால் அதன் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மித்தும், பீட்டர்சனும் மிரட்டலான ஆட்டத்தைக் கொடுத்ததால் சற்றே பீதி ஏற்பட்டது. ஆனால் ஸ்ரீசாந்த் தனது அபார பந்துவீச்சால் ஸ்மித்தை வீழ்த்தினார். ஹர்பஜன் சிங் பீட்டர்சனை விரட்டினார்.

அதைத் தொடர்ந்து அடித்து ஆட முயன்ற அம்லாவை ஸ்ரீசாந்த் வெளியேற்றவே தென் ஆப்பிரிக்கா இக்கட்டில் ஆழ்ந்தது. 

இந்த நிலையில் இன்று மீண்டும் விறுவிறுப்பான ஆட்டம் தொடர்ந்தது. குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்கள் விழவே இந்தியாவின் கை ஓங்கி வந்தது. இந்தியப் பந்து வீச்சு குறிப்பாக ஸ்ரீசாந்த்தின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அவருக்கு ஜாகிர்கானும், இஷாந்த் சர்மாவும் நல்ல துணையாக இருந்தனர்.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா பலவீனமாகி வந்தது. ஒரு கட்டத்தில் ஆஷ்வெல் பிரின்ஸ் கட்டையைப் போட்டு ஆட ஆரம்பித்ததால் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமான சூழல் காணப்பட்டது.

ஆனால் சரியான நேரத்தில் இஷாந்த் சர்மா, மார்க்கலை வெளியேற்றி இந்தியாவின் வெற்றியைப் பிரகாசப்படுத்தி விட்டார். இறுதியாக ஸோத்சோபேயை சட்டேஸ்வர் பூஜாரா ரன் அவுட் செய்ய தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற சம நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. 

3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றால் தொடரை வெல்ல முடியும். இந்தியா இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் குறையை நீக்க 3வது டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் இதே முனைப்புடன் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

English summary

India levelled the test series against South Africa with a thumping victory in Durban 2nd test. India defeated SA by 87 runs. SA could score only 215 in their 2nd innings. They were chasing the target of 303. Sreesanth and Zaheer Khan scalped 3 wickets each. Harbhajan Singh took 2 and Ishant Sharma snatched one wicket.


India 205 (Steyn 6-50) and 228 (Laxman 96) beat South Africa 131 (Harbhajan 4-10) and 215 (Sreesanth 3-35, Zaheer 3-57) by 87 runs 

இந்திய அணிக்காகக் காத்திருக்கும் தென் ஆப்பிரிக்கா!


தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் பேட்ஸ்மென்களை அச்சுறுத்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் தயாராகி வருவதாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் கிரிக்கெட் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. "நாங்கள் ஒரு ஸ்பின்னரை மட்டுமே தேர்வு செய்யவுள்ளோம், அதுவும் வேகப்பந்து பலத்தைப் பொருத்த்தே தீர்மானிக்கப்படும்.
" என்று அணித் தேர்வு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துவக்க வீரருமான ஆண்ட்ரூ ஹட்சன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 16ஆம் தேதி துவங்கும் இந்தத் தொடரின் துவக்கம் முதல் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது இந்தியாவின் பலம் பேட்டிங் என்றாலும் இந்திய அணி இன்னமும் எழும்பும் பந்துகளுக்கு பலவீனமாகவே உள்ளது என்று தென் ஆப்பிரிக்க அணி கருதுவதாக பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோர் தென் ஆப்பிரிக்க களங்களில் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் என்று கிரிக்கெட் எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது.


க‌‌ம்‌‌பீ‌ர் அ‌திரடி சத‌ம்: தொடரை வெ‌ன்றது இ‌ந்‌தியா

வதோதராவில் நடைபெ‌ற்ற 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் க‌ம்‌பீ‌ரி‌ன் அ‌திரடி சத‌த்தா‌ல் இ‌ந்‌தியா அ‌ணி நியூஸீலாந்து அணியை 9 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌திசாய‌த்‌தி‌ல் ‌வீ‌ழ்‌த்‌தி தொடரை கை‌ப்ப‌ற்‌றியது.


பூவா தலையா வெ‌ன்ற இ‌ந்‌திய அ‌ணி முத‌லி‌ல் ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணியை பே‌ட்டி‌ங் செ‌ய்த ப‌ணி‌த்தது.

தொட‌க்க ‌வீ‌‌ர‌‌ர்க‌ள் சொ‌‌ற்ப ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து அ‌‌ந்த அ‌ணி‌க்கு ‌‌வி‌க்கெ‌ட்டுக‌ள் மளமளவென ச‌ரி‌ந்தது. ‌ப்‌ரா‌ங்‌‌கி‌ளி‌ன் அ‌திகப‌ட்சமாக 72 ர‌ன் எடு‌த்தா‌ர். எ‌ன்.எ‌ல்.மெ‌க்கு‌ல்ல‌‌ம் 43 ரன‌் எடு‌த்தா‌ர். ‌ம‌ற்ற ‌‌வீர‌ர்க‌ள் அனைவரு‌ம் சொ‌ற்ப ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர்.

இ‌ந்‌திய த‌ர‌ப்‌பி‌ல் ஜா‌கீ‌ர்கான‌், அ‌‌ஸ்‌வி‌ன், ப‌த்தா‌ன் ஆ‌கியோ‌ர் தலா 2 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தின‌ர். மு‌ன்னா படே‌ல் 1 ‌வி‌க்கெ‌ட் கை‌ப்ப‌ற்‌றினா‌ர்.

225 ர‌ன்க‌‌ள் எடு‌த்த‌ா‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌‌க்குட‌ன் கள‌ம் இற‌ங்‌கிய இ‌ந்‌திய அ‌ணி 39.3 ஓவ‌ரி‌ல் 229 ர‌ன்க‌ள் எடு‌த்து வெ‌ற்‌றி வாகை சூடி தொடரை 3-0 எ‌ன்று கை‌ப்ப‌ற்‌‌றியது.

தொட‌க்க ‌வீரரு‌ம் அ‌ணி‌த்தலைவருமான க‌ம்‌பீ‌ர் அ‌திரடியாக ‌விளையாடி 117 ப‌ந்‌தி‌ல் 126 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து கடை‌சி வரை ஆ‌ட்ட‌‌ம் இழ‌க்காம‌ல் இரு‌ந்தா‌ர். இவ‌ர் 16 பவு‌ண்ட‌ரிகளை ‌விளா‌சினா‌ர். ம‌ற்றொரு தொட‌க்க ‌‌‌வீர‌ர் ‌‌‌விஜ‌ய் 30 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் வ‌ந்த கோ‌லி அபாரமாக ‌விளையாடி 63 ர‌ன் கு‌வி‌த்தா‌ர். இவ‌ர் 2 ‌சி‌க்ச‌ர், 6 பவு‌ண்ட‌‌ரிகளை ‌விளா‌சினா‌ர்.











ஆ‌ட்ட நாயகனாக க‌ம்‌பீ‌ர் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இந்திய அணி - சில நாள் முதல்வன்

இந்தியக் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முன்னெப்போதும் இல்லாத நிலையை அடைந்திருக்கின்றது. நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 -0 என்று வென்றதால் ICC டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அது போல் நூறு டெஸ்ட் வெற்றிகளையும் பெற்றுள்ளது. இப்போதுள்ள இந்திய அணி வீரர்களைப் பார்க்கும்போது இந்த வெற்றி எளிது போல் தோன்றலாம்.இந்த வெற்றி அதிகம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இது எளிதில் பெற்றதல்ல.இந்த அணி உருவாக, பத்தாண்டு காலம் பிடித்துள்ளது. கங்குலி தலைமையில் தூவப்பட்ட விதை இன்று தோனியின் பார்வையில் முளைத்துள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இந்திய அணி நியூ சிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் போன்ற நாடுகளில் விளையாடி டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.
வேற எந்த காலக்கட்டத்திலும் இந்திய அணி இப்படி வெற்றி பெறவில்லை.

90 களின் இறுதி வரை இந்திய அணி உள்ளூரில் மட்டுமே பலவான் என்ற நிலை இருந்தது.
அத்திபூத்தாற்போல் வெளிநாடுகளில் ஓரிரு வெற்றிகள் மட்டுமே கிடைத்தன. இந்திய அணி பெற்ற 100 டெஸ்ட் வெற்றிகளில் 41 வெற்றி கடந்த பத்தாண்டுகளில் வந்துள்ளது. அதுபோல் வெளிநாடுகளில் இந்திய அணி அடைந்துள்ள 25 டெஸ்ட் வெற்றிகளில் (ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகளிடம் பெற்ற வெற்றி நீங்கலாக) 13 வெற்றி கடந்த பத்தாண்டுகளில் வந்துள்ளது.

1999 ல் சூதாட்ட புகாரில் சிக்கி அணி கேப்டன் அசாருதீன் வெளியேற்றப்பட்ட நேரத்தில் சச்சின் தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சுருண்டது. அந்த நேரத்தில் சச்சினும் தலைமைப்பொறுப்பிலிருந்து விலக, கேப்டன் பதவி கங்குலியைத் தேடி வந்தது. கங்குலி செய்த முதல் காரியம் அணியின் மூத்த வீரர்கள் சிலரை வெளியேற்றி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். இதன் பலனாக மினி உலகக்கோப்பை இறுதி வரை இந்திய அணி சென்றது. பின்னர் இந்தியாவிற்கு பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. (உபயம்: லக்ஷ்மண் மற்றும் ஹர்பஜன்). இதுதான் இந்திய அணியின் வெற்றிப்பயணத்தின் முதல் படி எனலாம். ஏனெனில் ஆஸ்திரேலியா அணி அபோது தான் தொடர்ந்து பல டெஸ்ட் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்த நேரம். யாராலும் வெல்ல முடியாத அணி என்ற அதன் நிலை சற்றே ஆட்டம் கண்டது.

பின்னர் இங்கிலாந்து சென்ற இந்திய அணி 1 - 1 என்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இந்தத் தொடரின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தான் சேவாக் முதன்முதலில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அணிக்கு சிறந்த அதிரடியான துவக்க வீரர் கிடைத்தார். அதன்பின் ஸ்டீவ் வாவின் கடைசி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியா சென்ற கங்குலி தலைமையிலான அணி 1 - 1 என்று சமன் செய்தது. பின்னர் பாகிஸ்தான் நாட்டில் அவர்களுக்கு ஏதிரான டெஸ்ட் வெற்றி என்று இந்தியா, நன்கு முன்னேறியது.

அணியின் புதிய பயிற்சியாளர் சேப்பலுடன் மோதி கங்குலி வெளியேறிய பின்னர் டிராவிட் கேப்டன் பொறுப்பேற்றார்.பின்னர் வெஸ்ட்இண்டீஸ் சென்ற இந்திய அணி அங்கு நடந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. பின்னர் தென் ஆப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் வெற்றி , இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடர் வெற்றி என்று நன்கு முன்னேறிய இந்தியா பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. உலகக்கோப்பையில் மோசமான தோல்விக்குப் பின் டிராவிட் வெளியேற கும்ப்ளே கேப்டன் பொறுப்பேற்றார். அவரின் தலைமையில் பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரை வென்றது. பின்பு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நடுவர்களின் மோசமான தீர்ப்புகளால் தொடரை 2 - 1 என்று இழந்தது. இந்த கால கட்டத்தில் தான் சேவாக் மற்றும் காம்பிர் இருவரும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக அறியப்பட்டனர். இந்திய அணியின் நீண்டநாள் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது.

பின்னர் தோனி தலைமையில் தென் ஆப்பிரிக்காவுடன் 1 - 1 என்று சமன் செய்தது. இங்கு வந்த ஆஸ்திரேலியா அணியை 2 - 0 என்று தோற்கடித்தது, பின்பு நியூசிலாந்து சென்ற இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்றது. இதுவரை தலைமையேற்று விளையாடிய டெஸ்ட் போட்டி ஒன்றிலும் தோற்காமல் வெற்றிக்கேப்டனாக வலம் வருகிறர் தோனி.

இந்த முதலிடம் நிரந்தரம் என்று நாம் அணியினரும் சரி, நாமும் சரி, நினைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா நம்மை முந்தும் நிலையிலுள்ளது.மேலும் அடுத்த ஒரு வருடம் இந்தியா, வங்காளதேசத்தை மட்டுமே எதிர்த்து டெஸ்ட் விளையாடவுள்ள நிலையில், தரவரிசையில் நம் அணியின் சரிவும் தவிர்க்க முடியாதது எனத்தெரிகின்றது. இந்த நிலையில் இந்திய அணியை மேம்படுத்த தோனி என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இந்தப்பத்தாண்டு காலம் டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணியின் பலம், பேட்டிங் மட்டுமே. பௌலிங்கில் கும்ப்ளே, ஹர்பஜன் நீங்களாக ஒருவரும் ஜொலிக்கவில்லை. ஆக இந்தியாவின் பலம், சுழற்ப்பந்து மட்டுமே. ஏனெனில் இந்திய சுழற்ப்பந்து வீரர்கள் வெளிநாடுகளின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களிலும் நமக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றனர். சற்று கிரிக்கெட் வரலாற்றைப் புரட்டினால், இந்திய அணி வெற்றி பெற்ற இந்த காலக்கட்டத்தில், வேகப்பந்து வீச்சில் ஒவ்வொரு அணியிலும் சிறந்த இரு வீரர்கள் இருப்பர்.

உதாரணம்:
தென் ஆப்பிரிக்கா - டோனல்ட் - பொல்லாக்
வெஸ்ட் இண்டீஸ் - வால்ஷ் - அம்ப்ரோஸ்
பாகிஸ்தான் - வாசிம் அகரம் - வாகார் யூனிஸ்
ஆஸ்திரேலியா - மெக்ராத் - ப்ரெட் லீ

ஆனால் இந்திய அணியில் ஸ்ரீநாத் சென்ற பின்னர் அந்த இடம் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளது. நாமும் நிறைய பரிசோதனைகள் செய்து பார்த்தும் சிறந்த இரு வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லை. வரும் ஓரிரு வீரர்களும் சில காலம் மட்டுமே சோபிக்கின்றனர். பின் காயம் மற்றும் உடல் தகுதியின்மை காரணமாக சில காலம் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் சுழற்ப்பந்து வீரர்கள் மற்றும் பேட்டிங் இரண்டை மட்டுமே நம்பி இவ்வளவு வெற்றிகள் பெறுவது சுலபமில்லை.வேகப்பந்து வீச்சாளர் பாற்றக்குறையைப் போக்குவது இவரின் முதல் கடமையாகும்.

இனி இந்திய அணி ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடி, வென்று நீருபிக்கும் போது மட்டுமே அது முதலிடம் பிடிக்கவல்ல அணியென்று நினைக்கமுடியும்.

மேலும் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெறப்போகும் நிலையில் அந்த இடங்களை சரியாக நிரப்பும் இளம்வீரர்களைத் தேர்வு செய்து இப்பொது முதல் பயிற்சி அளிப்பது காட்டாயமாகின்றது. இவை அனைத்தும் நிறைவேற்றும் பட்சத்தில் தான் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பான இடம் பெரும். ஆனால் அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.