அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

கங்குலி, லாரா வரிசையில் ஜெயசூரியா-வாங்க ஆளில்லை

ஐபிஎல் 4 தொடரின் வீரர்கள் ஏலம் 2வது நாளாக இன்றும் நடந்தது. இதில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யாவை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. கங்குலி, பிரையன் லாரா ஆகிய முக்கிய வீரர்களைத் தொடர்ந்து ஜெயசூர்யாவும் யாராலும் கேட்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று தொடர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த எல்.பாலாஜி இந்த முறை கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டு விட்டார். அவரை 5 லட்சம் டாலருக்கு கொல்கத்தா வாங்கியது.

நான்காவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் அதிகபட்ச விலையுடன் கம்பீரை விலைக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

அதேசமயம், கங்குலி, ஜெயசூர்யா, பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் ஆகியோரை யாரும் வாங்காத நிலை ஏற்பட்டது.

இன்று 2வது நாளாக ஏலம் தொடர்ந்தது. இன்றைய ஏலத்தில், உமேஷ் யாதவை ஏழரை லட்சம் டாலருக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், டேணியல் கிறிஸ்டியானை 9 லட்சம் டாலருக்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் வாங்கின.

முனாப் படேலை 7 லட்சம் டாலருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த முறை ஆடிய எல்.பாலாஜியை 5 லட்சம் டாலருக்கு கொல்கத்தா விலைக்கு வாங்கியது.

வினய் குமாரை கொச்சி அணி 4.75 லட்சம் டாலருக்கு வாங்கியது. அசோக் திண்டாவை 3.75 லட்சம் டாலருக்கு டெல்லி வாங்கியது.

ஷான் டெய்ட்டை 3 லட்சம் டாலருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது.

ஆஸ்திரேலியாவின் கிளின்ட் மெக்கேயை 1 லட்சத்து 10 ஆயிரம் டாலருக்கு மும்பை இந்தியன்ஸ் கடுமையாக போராடி பெற்றது.

திஷரா பெரைராவை கொச்சி அணி 80 ஆயிரம் டாலருக்கு வாங்கியது.

அஜீத் அகர்கரை டெல்லி அணி 2.10 லட்சம் டாலருக்கு வாங்கியது

வேணுகோபால ராவை, டெல்லி அணி 7 லட்சம் டாலருக்கு வாங்கியது.

நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸை சென்னை அணி 2 லட்சம் டாலருக்கு எடுத்தது.

பென் ஹில்பன்ஹாஸை சென்னை அணி 1 லட்சம் டாலருக்கு எடுத்தது.

ஜெயதேவ் உனக்தத்தை கொல்கத்தாவும், மன்ப்ரீத் கோனியை டெக்கான் சார்ஜர்ஸும், ஜோகிந்தர் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸும் வாங்கின.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவை சென்னை அணி வாங்கியது.

ஓவைஸ் ஷாவை 2 லட்சம் டாலருக்கு கொச்சி ஏலத்தில் எடுத்தது.

விலை போகாத வீரர்கள் :

இன்டிகா டி சரம், திணேஷ் ராம்தின், ததென்டு டைபு, பிரன்டன் டெய்லர், திணேஷ் சன்டிமால், ரவி போபரா, திவாயன் ஸ்மித், ஜேக்கப் ஓரம், ஜஸ்டின் கெம்ப், வாசிம் ஜாபர், பீட்டர் சிட்டிள், சமிந்தா வாஸ், டிம் செளதி, அப்துர் ரஸ்ஸாக், மார்ட்டின் குப்தில், சிமோன் காடிச், ஷிவ்நரேன் சந்தர்பால், ஜெஹன் முபாரக், மெக்காயா டினி, வி.ஆர்.வி. சிங், சனத் ஜெயசூர்யா, மைக்கேல் லம்ப், முகம்மது கைப், சமரசில்வா, இயான் பெல், கைல் மில்ஸ், காலின் இங்க்ராம், மான்டி பனீசர், ரங்கன ஹெராத், பால் ஹாரிஸ், ஆகியோர்.

ஜெயசூர்யா கடந்த மூன்று தொடர்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்தவர் ஆவார். இந்த முறை அவரை யாரும் ஏலம் கேட்கவில்லை. கங்குலி, லாரா வரிசையில் ஜெயசூர்யாவும் இணைந்திருக்கிறார்.

English summary

No takers for Sanath Jayasuriya in the 2nd day of IPL-4 players auction. Jayasurya was playing for Mumbai Indians till now. Umesh Yadav sold to Delhi Daredevils for $7,50,000. and KKR bought L.Balaji for $5,00,000. Balaji earlier was with Chennai Super Kings. The auction continues.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!