அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

கிரிக்கெட் துளிகள்


காயம்-தெ. ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஷேவாக்குக்கு ஓய்வு

வீரேந்திர ஷேவாக்குக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.


சில மாதங்களுக்கு முன்பு ஷேவாக்குக்கு்க காயம் ஏற்பட்டது. அதிலிருந்து குணமான நிலையில் அவர் தற்போது தென் ஆப்பிரிக்க தொடரில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஒரு நாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 12ம் தேதி ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. தற்போது ஷேவாக்குக்குப் பதில் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோளில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஷேவாக் ஒரு நாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதில் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு நாள் தொடரில் அணியின் 17வது வீரராக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

India were today dealt a massive blow ahead of next month"s ODI series against South Africa with aggressive opener Virender Sehwag ruled out due to a shoulder injury. Sehwag, who had nursed a shoulder injury a few months ago as well, will be replaced by Rohit Sharma in the squad for the five-match series starting here on January 12.

ஐபிஎல் போட்டியிலிருந்து அனில் கும்ப்ளே திடீர் விலகல்

ஐபிஎல்-4 போட்டித் தொடரிலிருந்து அனில் கும்ப்ளே விலகிக் கொண்டுள்ளார். கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான பணிகளில் தான் பிசியாக இருப்பதால் விரைவில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் தான் பங்கேற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.


ஐபிஎல் 4வது போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதிலிருந்து கும்ப்ளே விலகிக் கொண்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக 2009 மற்றும் 2010 ஆகிய இரு சீசன்களில் செயல்பட்டார் கும்ப்ளே. 

தனது விலகல் குறித்து கும்ப்ளே கூறுகையில், ஐபிஎல் 4வது போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலத்திலிருந்து விலகுகிறேன். ஐபிஎல் தொடரில் நான் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளையும் சிறந்த முறையில் அனுபவதி்தேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தேர்தலில் கும்ப்ளே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

English summary

Former India captain Anil Kumble today pulled put of this weekend's Indian Premier League auction, citing his involvement in cricket administration and other commitments. Kumble, who captained Royal Challengers Bangalore in two IPL seasons, in 2009 and 2010, said he was withdrawing from the January 9-10 auction because of business commitments, his association with cricket administration and wildlife in various capacities.

இங்கிலாந்தின் டாப் 10 ஈகோ பட்டியலில் யுவராஜ் சிங்

இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் நடத்திய உலகின் 10 ஈகோ படைத்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளார்.

சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் யுவராஜ் சிங். இந்த நிலையில் அவரை டென்ஷனாக்கும் வகையில் இந்த கருத்துக் கணிப்பு வந்துள்ளது.


சமீப காலத்தில் விளையாட்டுத்துறையில் அதிகம் ஈகோ படைத்தவர்களாக உள்ளவர்கள் குறித்த பட்டியல் இது. இதில் டாப் 10 வீரர்கள் பட்டியலில் யுவராஜுக்கம் இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து டெய்லி டெலிகிராப் கூறுகையில், தனது ஈகோவால் பல பாதகங்களை சந்தித்து வருகிறார் யுவராஜ்சிங். இவரது ஈகோவால்தான் ஐபிஎல் தொடரில் அவர் இடம்பெற்ற அணி தோல்வியைத் தழுவியது.

அவரது வங்கி இருப்பு உயர்ந்து கொண்டே வருவதைப் போல இடுப்பு சுற்றளவும் (குண்டாகி விட்டாராம்), ஈகோவும் கூட உயர்ந்து கொண்டே போகிந்றன. ஆனால் அவரது விளையாட்டுத் திறன் குறைந்து கொண்டே வருகிறது. 

இதன் விளைவு இலங்கையில் நடந்த போட்டித் தொடரில் கலந்து கொண்ட இந்திய அணியில் 12வது வீரராக, தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்று அது கூறியுள்ளது.

ஈகோ பிடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சனும் இடம் பிடித்துள்ளார். இவர்கள் தவிர குத்துச்சண்டை ஜாம்பவான் முகம்மது அலி, கால்பந்து பயிற்சியாளர் ஜோஸ் மொரின்ஹோ, கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் மைக்கோல் ஜோர்டான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

English summary

His “ego, bank balance and waistline” have all swollen in recent years but his performance has deserted him, wrote The Daily Telegraph today about the Indian cricket star and Chandigarh boy Yuvraj Singh. The swipe was made in a piece on the “top 10 sporting egos” of recent times. The talented and temperamental batsman last year lost his place in the Indian Test squad because of his poor form. The British newspaper, while making the unflattering reference, insinuates that Yuvraj’s ego was inflated by the ‘moolah from the Indian Premier League’.

ஆஸி. கிரிக்கெட் அணியில் பாக். வம்சவாளி உஸ்மான் காஜா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் பிறந்தவர்.

24 வயதேயாகும் அந்தஇளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும்.


வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது, அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா.

இரு நாடுகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட்போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இதில் காஜாவும் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பந்து வீச்சு குறித்து சற்றும் பயமில்லாமல் மிகவும் தைரியமாக ஆடி வருகிறார் காஜா. தேநீர் இடைவேளையின்போது அவர் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்திருந்தார். 

முதல் இரு பந்துகளை ஒன்றை பவுண்டரிக்கும், இன்னொன்றில் 2 ரன்கள் எடுத்தும் ஆஸ்திரேலிய ரசிகர்களையும், போட்டியை நேரில் பார்த்து வரும் அவரது பெற்றோரையும் மகிழ்ச்சிப்படுத்தினார் காஜா.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முஸ்லீம் ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அதை விட முக்கியமாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஆடுவதும் இதுவே முதல் முறையாகும்.

English summary

Debutant Usman Khawaja made a confident start to his Test career as Australia got away to a good start in the fifth Ashes Test against England at the Sydney Cricket Ground today. Pakistan-born Khawaja, 24, the first Muslim to play Test cricket for his adopted country, dealt with everything the England bowlers could throw at him to remain unbeaten on 26 when rain forced an early tea

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!