அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

'ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்' தெண்டுல்கரிடம் இருந்து ரூனி பாடம் கற்கவேண்டும்''

'ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்' தெண்டுல்கரிடம் இருந்து ரூனி பாடம் கற்கவேண்டும்''- இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் 
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் எட் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் தெண்டுல்கர் 14 ஆயிரம் ரன்களை கடந்தது குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,


''எனக்கு தெரிந்தவரையில் மைதானத்தில் தெண்டுல்கர் ஆவேசப்பட்டதை பார்த்ததே இல்லை.தப்புசெய்யும் சூழ்நிலையை அவர் உருவாக்குவதும் இல்லை.பயிற்சியாளரிடமோ அல்லது நடுவர்களிடமோ அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் இல்லை.டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை தெண்டுல்கர் அடித்துள்ளார்.13 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரம் ரன்களாக உயர்த்த எத்தனையோ இன்னிங்ஸ்களில் அவர் விளையாட வேண்டும்.13 ஆயிரம் ரன்கள் அடித்து விட்டோமே என்று அவர் ஓய்ந்துவிடவில்லை.திறமையாக ஆடுகிறார் ரன்களை குவிக்கிறார்.அதனால்தான் 37 வயதிலும் ஒரு கிரிக்கெட் ஜீனியசாக ஜொலிக்கிறார்.''



''இங்கிலாந்தில் கால்பந்து வீரர்கள் ஹீரோக்கள் என்றால் இந்தியாவில் தெண்டுல்கர் மீது ரசிகர்கள் அளவு- கடந்த நம்பிக்கை வைக்கின்றனர்.இவ்வளவு நெருக்கடிக்கும் இடையில் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வீரராக இருக்கிறார்.பயிற்சியாளரோ, நெருக்கடி கொடுக்கும் மீடியாவோ,ரசிகர்களோ அவரது இயல்பு குணத்தை மாற்றி விடவில்லை.ரூனியும் தெண்டுல்கரை மனதில் கொள்ள வேண்டும்.அவரைப் போலவே உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் கிரிக்கெட்டில் எப்படி தெண்டுல்கரோ அப்படி கால்பந்தில் ரூனி மாற முடியும்.தெண்டுல்கர் ரன்களை குவிப்பது போல் ரூனியும் கோல்களை அடிக்க முடியும்.உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு சச்சின் ஒரு உதாரணம்''


இவ்வாறு எட் ஸ்மித் அந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!