ஆஸ்ட்ரேலிய வீரர் நேதன் பிராக்கன் ஓய்வு அறிவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப்போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் மும்பை, சென்னை, கொல்கத்தா, டில்லி, பெங்களூர், நாக்பூர், அகமதபாத், மொகாலி ஆகிய மைதானங்களிலும், இலங்கையில் கொழும்பு, ஹம்பன்டோடா, பல்லி கெலே ஆகிய மைதானங்களிலும், வங்காளதேசத்தில் மிர்பூரிலும் போட்டி நடை பெறுகிறது.
ஆஸ்ட்ரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் நிபுணரான இடது கை வேகப்பந்து வீச்சாளர் நேதன் பிராக்கன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவர் 116 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவர் அதிகம் இடம்பெறாவீட்டாலும் ஒரு சில போட்டிகளில் விளையாடினார்.
கடைசியாக செப்டம்பர் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார் பிராக்கன். தற்போது காயம் காரணமாக அவர் ஓய்வு அறிவித்துள்ளார்.
......
இந்தியா-இங்கிலாந்து போட்டி இல்லை: கொல்கத்தா மைதானத்தில் 3 போட்டி தான் நடைபெறும்; சரத்பவார் பேட்டி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப்போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் மும்பை, சென்னை, கொல்கத்தா, டில்லி, பெங்களூர், நாக்பூர், அகமதபாத், மொகாலி ஆகிய மைதானங்களிலும், இலங்கையில் கொழும்பு, ஹம்பன்டோடா, பல்லி கெலே ஆகிய மைதானங்களிலும், வங்காளதேசத்தில் மிர்பூரிலும் போட்டி நடை பெறுகிறது.புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 4 ஆட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா- இங்கிலாந்து (27ந்தேதி), தென்ஆப்பிரிக்கா- அயர்லாந்து (மார்ச் 15), அயர்லாந்து-நெதர்லாந்து (மார்ச்18), கென்யா- ஜிம்பாப்வே (மார்ச் 20) ஆகிய போட்டிகள் அங்கு நடைபெறும் என்று ஏற் கனவே வெளியிடப்பட்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது.
உலக கோப்பை போட்டிக்காக கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதித்த கெடுவுக்குள் ஸ்டேடியத்தின் பணி முடிவடையவில்லை. இதனால் இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தை அங்கு நடத்த இயலாது. மற்ற 3 ஆட்டங்களையும் நடத்தலாம் என்று ஐ.சி.சி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இது பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் 7-ந்தேதி வரை காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் மூலம் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்து விட்டது. மறுபரிசீலனை பேச்சுக்கே இடமில்லை என்று ஐ.சி.சி. திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இதன் காரணமாக இந்தியா- இங்கிலாந்து மோதும் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறாது. வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐ.சி.சி. தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார் கூறியதாவது:-
இதுதொடர்பாக ஐ.சி.சி. தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார் கூறியதாவது:-
கொல்கத்தா மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் மற்ற 3 ஆட்டங்களும் அங்கு நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என்று நம்புகிறேன். இது சம்பந்தமாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எழுத்து பூர்வமாக தெரிவித்து விட்டோம். கிரிக்கெட் வாரிய தலைவர் சசாங்க மனோகரிடமும் பேசிவிட்டேன். ஸ்டேடியம் தயாரானால் மட்டுமே அங்கு எஞ்சிய 3 போட்டியையும் நடத்த முடியும் என்பதை கூறிவிட்டேன்.
மேற்கு வங்காள முதல்- மந்திரி என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு இனங்க நான் தனிப்பட்ட முறையில் இதில் தலையிட்டேன். ஆனால் ஐ.சி.சி. குழு வரும்போது மைதானம் தயாராக இல்லை. இவ்வாறு சரத்பவார் கூறினார். இந்தியா-இங்கிலாந்து மோதும் ஆட்டம் பெங்களூரில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா இன்னும் நம்பிக்கையில் உள்ளார்.











