அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

டெ‌ஸ்‌ட் தரவரிசையில் 25வது இட‌த்து‌க்கு செ‌ன்றா‌ர் பாண்டிங்


ஐ.சி.சி.யின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 12 இட‌‌ங்க‌ள் ச‌ரி‌ந்து ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி‌த் தலைவ‌ர் ‌ரி‌க்‌கி பா‌ண்டி‌ங் 25வது இட‌த்து‌க்கு த‌ள்ள‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர்.


அடிலெய்டு டெஸ்டில் 0, 9 ரன்கள் மட்டுமே எடுத்த ரிக்கி பாண்டிங் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறார்.

12 இடங்கள் சரிந்து 25வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டாப் 20இல் இருந்து வெளியேற்றப்படுவது 2001ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

பந்து வீச்சாளர் தரவரிசையில், அடிலெய்டு போட்டியில் மொத்தம் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், ஜாகீர்கான் (இந்தியா) வகித்த 3வது இடத்தை பிடித்துள்ளார். ஜாகீர்கான் 4வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.

மற்றொரு இங்கிலாந்து பவுலர் ஸ்வான் முதலிடத்தை நெருங்கி இருக்கிறார். முதலிடத்தில் உள்ள ஸ்டெயினை (தென் ஆப்பிரிக்கா) விட 14 புள்ளிகளே ஸ்வான் பின்தங்கி உள்ளார்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!