கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து அதிரையில் அதிரை ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் [ AFCC ] சார்பாக மாவட்ட அளவில் Twenty-20 கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
சென்ற [23-04-2013 ] அன்று துவங்கிய முதல் போட்டி இன்றுடன் நிறைவுற்றது. இன்று [ 02-05-2013 ] மதியம் 2 மணியளவில் AFCC கிரிகெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் வலுவான இரு அணிகளாகிய அதிரை AFCC அணியினரும், தஞ்சை SGCC அணியினரும் மோதினார்.
முன்னதாக தாஸ் வென்ற AFCC அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடினர். இதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து இருந்தனர். AFCC அணியினரின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் அவர்கள் 57 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து, இத்தொடரில் தனி நபர் அதிக ரன்கள் எடுத்த சாதனையை தக்க வைத்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய தஞ்சை SGCC அணியினர் தொடர்ந்து போராடி 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவினர். சிறப்பாக பந்து வீசிய AFCC அணியினரின் நட்சத்திர வீரர் முகைதீன் [ பொட்டியப்பா ] தொடர்ந்து மூன்று விக்கெட் எடுத்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். பலம் பொருந்திய இரு அணியினரில் அதிரை AFCC அணியினர் சிறப்பாக விளையாடி 24 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்று அதிரைக்கு பெருமை சேர்த்து தந்தனர்.
வெற்றி பெற்றோர் விவரங்கள் :
1. முதல் இடம் : AFCC அணியினர் [ அதிரை ] - பரிசுத்தொகை ரூபாய் - 30,000/-
2. இரண்டாம் இடம் : SGCC அணியினர் [ தஞ்சை ] - பரிசுத்தொகை ரூபாய் - 20,000/-
3. மூன்றாம் இடம் : காரைக்குடி அணியினர் - பரிசுத்தொகை ரூபாய் - 15,000/-
கடந்த பத்து தினங்களாக நடைபெற்ற இந்த போட்டிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகைதந்த பல்வேறு அணியினர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முன்னாள் விளையாட்டு வீரர்கள் பாருக், சாலிஹு ஆகியோர் போட்டியைத் துவங்கி வைத்தனர். இன்றைய இறுதி போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சகோதரர்கள் ஆதம் செய்யது, மாலிக், இப்ராஹீம், சேக் அலி, நெய்னா, ஆஷிக், அனஸ் , சமியுல்லா ஆகியோருடன் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்களோடு ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைத்த அஹமது முஹைதீன் (Potty) அவர்களுக்கு AFCC நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொல்கிறோம்.
சிறந்த ஆட்ட நாயகன் விருதை : சகோ. அஹமது முஹைதீன் (Potty) க்கு வழங்கப்பட்டது.
சிறந்த தொடர் ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் விருதை : சகோ. இஸ்மாயில் (Dok) க்கு வழங்கப்பட்டது.
சிறந்த புதுமுக வீரருக்கான விருதை : சகோ. அப்துல் வஹாப் க்கு வழங்கப்பட்டது.
சிறந்த கேட்ச்சிக்கான விருதை : ரஷீத் க்கு வழங்கப்பட்டது.
சிறந்த கேட்ச்சிக்கான விருதை : ரஷீத் க்கு வழங்கப்பட்டது.
சிறந்த பந்துவிச்சிக்கான விருதை : சங்கர் (தஞ்சை) க்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் AFCC சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
அதிரைக்கு பெருமை சேர்த்து தந்த AFCC அணியினருக்கு பாராட்டுகள் - வாழ்த்துக்கள்
ReplyDelete