உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படும் மைதானங்களில் கொல்கத்தா மைதானமும் ஒன்று. இந்த மைதானத்தில் 4 போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. உலக கோப்பை போட்டிக்காக கொல்கத்தா மைதானம் புதுப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதன் பணிகள் இன்னும் முடியவில்லை.
கடந்த 25-ந்தேதியே பணிகள் முடிக்க கெடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் பணி முடியாததால் பிப்ரவரி 27-ந்தேதி தொடங்கும் முதல் போட்டியை மட்டும் ரத்து செய்து விட்டு வேறு மைதானத்தில் நடத்தலாம் என்று சர்வதேச கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வருகிறது.
இதற்கு கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கொல்கத்தா கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதினார். அதில் விரைவில் பணிகளை முடித்து விடுவோம். எனவே காலக்கெடுவை 7-ந்தேதி வரை நீடிக்க வேண்டும். போட்டியை ரத்து செய்யக் கூடாது என்று கூறி இருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் சங்கம் ஐ.சி.சி.க்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கொல்கத்தா முதல் போட்டியை ரத்து செய்யக்கூடாது. மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் ஷாசங்க் மனோகர் கூறியதாவது:-
டால்மியா எழுதிய கடிதம் எங்களுக்கு கிடைத்ததும் அதை ஐ.சி.சி.க்கு அனுப்பி வைத்து விட்டோம். இதனுடன் இந்திய கிரிக்கெட் சங்கமும் தனியாக ஐ.சி.சி.க்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கொல்கத்தா மைதானத்தை தயார்படுத்த 10 நாட்கள் அவகாசம் கொடுங்கள், முடித்து கொடுத்து விடுகிறோம்.
முதல் போட்டியை ரத்து செய்ய வேண்டாம் என்று கேட்டு இருக்கிறோம். இதை ஐ.சி.சி. சாதகமான முறையில் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
31-ந்தேதிக்குள் மாற்று மைதானத்தை தேர்வு செய்யும்படி கூறி இருக்கிறார்கள். ஆனாலும் நாங்கள் அனுப்பிய கடிதத்தின்படி பேச முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!