அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

உலககோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு அப்ரிடி கேப்டன்?


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 14 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 15 பேர் கொண்ட அணி வீரர்களை எல்லா நாடுகளும் அறிவித்து விட்டன.   பாகிஸ்தான் அணி மட்டும் கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் வீரர்களை மட்டும் அறிவித்து இருந்தது. அந்த அணியின் 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு அப்ரிடி கேப்டனாக இருக்கிறார். ஆனால் அவரை கேப்டனாக அறிவிக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வைத்திருந்தது.

நியூசிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் மிஸ்பா-உல்-ஹக் கேப்டன் பதவியில் சிறப்பாக பணியாற்றினார். இதனால் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்ற விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாறுப்பட்ட கருத்தை கொண்டிருந்தது.

இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணிக்கு அப்ரிடியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து நம்ப தகுந்த வட்டாரங்கள் இதை தெரிவித்து உள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ்பட் அப்ரிடியை விரும்பவில்லை. மிஸ்பா-உல்-ஹக்கை கேப்டனாக நியமிக்க விரும்பினார். இதேபோல யூனுஸ்கானும், மிஸ்பாவுக்கு ஆதரவாக இருந்தார்.

இந்த நேரத்தில் அப்ரிடியை கேப்டனாக தொடர்ந்து நியமிக்காவிட்டால் அணியில் சிக்கல் ஏற்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதியது. இதனால் அப்ரிடியை தொடர்ந்து கேப்டனாக நீடிக்க செய்வது என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!