அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

போட்டியை காண வந்திருக்கும் எந்திர மனிதன்


இந்திய கொடியை வைத்திருக்கும் எந்திர நடுவர்


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று கொச்சியில் நடைபெற்று வரும்  இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அதிரடியாக 66 பந்துகளில் 72 ஓட்டங்களையும், ஜடேயா 37 பந்துகளில் 61 ரன்களையும் எடுத்தனர். சுரேஷ் ரைனா 78 பந்துகளுக்கு 55 ரன்களை எடுத்தார். வழமை போன்று இம்முறையும் கௌதம் கம்பீர், ராஹேன் அதிரடியாக ஆட தவறினர். ராஹேன் 4 ரன்களுடனும், கௌதம் கம்பீர் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஆரம்பத்தில் மிக மெதுவாக விளையாடிய இந்திய அணி, இறுதி 10 ஓவர்களில் 116 ரன்களை எடுத்தது. இறுதி ஓவரில் மாத்திரம் ஜடேயா 20 ஓட்டங்களை எடுத்தார்.  தோனி 9 ரன்கள் எடுத்திருந்த போது நேரடியாக விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். எனினும் மைதானத்தின் ரசிகர்களின் சத்தத்தில், பந்து தோனியின் பேட்டில் பட்டது நடுவருக்கு கேட்காமல் போனதால் அவர் ஆட்டமிழப்பை கொடுக்கவில்லை. இது இங்கிலாந்து வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!