அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

அதிரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் உற்சாக செய்தி


"அதிரை AFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி 2014"

ஆம் வருகின்ற எப்ரல் 19 அன்று ஷிபா மருத்துவமனை எதிர்புறம் அமைந்திருக்கும் கிரானி மைதானத்தில் மாவட்ட அளவிலான Cricket தொடர் போட்டி இவ்வாண்டும் நடைபெறவுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் தலை சிறந்த அணிகளுள் ஒன்றான Adirai Afcc இப்போட்டியை நடத்த உள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியில் Adirai Afcc முதல் பரிசை தட்டி சென்றதுடன் அதிரைக்கு பெருமை தேடித்தரும் வண்ணமாக தஞ்சை அணிக்காக மாவட்ட அளவில் விளையாடும் வாய்ப்புகளையும் அவ்வணியின் வீரர்கள் பெற்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.. தஞ்சை மாவட்டத்தில் அதிரைகென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் Adirai Afcc இவ்வாண்டும் மாவட்ட அளவில் வெற்றிபெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு...

இவ்வாண்டின் பரிசுத்தொகை விவரம் பின்வருமாறு.

முதல் பரிசாக ₹30,000



இரண்டாம் பரிசாக ₹20,000



மூன்றாம் பரிசாக ₹15,000



நான்காம் பரிசாக ₹10,000



(மற்றும் சிறப்பு பரிசுகள்)

இதில் பங்குபெற விரும்பும் அணிகள் முன்னதாகவே பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்www.adiraiafcc.blogsopt.in

AFCC மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி 2014

அன்பிற்கினிய சகோதரர்களே வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி தஞ்சை மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி AFCC அணியால் நடத்தவிருக்கிறது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது.

மேலும் நமதூர் அருகே அமைந்திருக்கும் அனைத்து சுற்றுவட்டார ஊர்களில் இப்போட்டியை தெரியப்படுத்துவது ஒவ்வொருக்கும் தலையாய கடமை என்பதால் அனைவரும் இதனை துஸ்பிரயோகம் / அலட்சியம் காட்டாமல் தெரியப்படுத்த வேண்டுமென நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.



சென்ற ஆண்டைப்போல் இவ்வாண்டும் சிறப்புடனும், பலமிகுந்த அணியாகவும் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டுகிறது.

இங்ஙனம்
AFCC - நிர்வாகம்

ஆக்கம் : இர்ஃபான் (AFCC மீடியா குழு)



அதிரைக்கு பெருமை சேர்த்த AFCC அணி இளம் வீரர்!

அல்ஹம்துல்லில்லாஹ்  AFCC அணி வீரர்  ஃபயாஸ் அஹ்மது மாவட்டத்தில் அளவிலான கிரிக்கெட் தொடரில் தேர்வு பெற்றுள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம், அதிரைக்கு பெருமை சேர்த்த இளம் வீரர்  ஃபயாஸ் அவர்கள் தற்பொழுது திருச்சியில் ஜமால் முஹம்மத் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் . 


சென்ற [23-04-2013 ] அன்று அதிரை AFCC அணி தஞ்சை மாவட்ட அளவிலான 20/டுவென்டி ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தி கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது. தஞ்சை கிரிக்கெட் அசோசியேஷன்  மெம்பர்கள் பலரும் கண்டு AFCC அணியை வெகுவாக பாராட்டினர்.


அதிரை AFCC அணி இளம் வீரர்களின் அட்டத்திறமைக் கண்ட  அசோசியேஷன்  மெம்பர்கள்  under-19age மற்றும் under-25age வீரர்களின் தேர்வுக்கு அழைப்பு விடுத்தனர். அவ்வழைப்பை ஏற்று  11 பேர்க்கொண்ட AFCCயின் இளம் வீரர்கள் தஞ்சைக்கு விரைந்தனர். 

இந்நிலையில் மறுதேர்வு  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான   under-16age மற்றும் under-19age வயதிற்குட்பட்டோர் போட்டிக்கான தஞ்சை மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு தஞ்சையில் நடந்தது.

அதன்பின் தேர்வுபெற்ற வீரர்களுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டு 15 பேர்க்கொண்ட அணி தேர்வு செய்யப்பட்ட வீரர்களை தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் காளிதாஸ் வாண்டையார் அறிவித்துள்ளார்.

அதில் 19 வயதிற்குட்பட்டோர்  அணியில் நமது அதிரை  AFCC அணி இளம் வீரர் ஃபயாஸ் அஹமது   அவர்கள் தேர்வு பெற்றார்.

தஞ்சாவூர் கிரிக்கெட் சங்கத்திற்கு அதிரை AFCC நிர்வாகிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

தினமலர் செய்தி [11.07.2013]
இங்ஙனம் 
AFCC - நிர்வாகம் 

புனித ரமலான் வாழ்த்து.


வரும் புனித ரமலான் மாதம், அருள் மிகுந்த மாதம், அருட்கொடையை அல்லாஹ் நம்மீது பொழியும் மாதம் ஆகையால் இம்மாதத்தில் விளையாட தடை விதித்துள்ளது AFCC நிர்வாகம். 

உங்கள் பொழுதை வீண் பேச்சிலோ,செயலிலோ மற்றும் இரவுபொழுதில் நேரத்தை வீணாக கழிக்காமல் அல்லாஹ்வின் அருளை பெற அதிகமதிகம் திருமறையை ஓதி நன்மையை பெறுங்கள் ..இன்ஷா அல்லாஹ். 

இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.

அனைத்து வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் இனிய ரமலான் கரீம்...

இங்ஙனம் 
நிர்வாகம் 
AFCC (அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்).
அதிராம்பட்டினம்.

ஐசிசி டெஸ்ட் போட்டி முன்னணி 4 அணிகள் மட்டுமே வாய்ப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்சில் 2017ம் ஆண்டு நடக்கிறது. 2வது போட்டி 2020ம் ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த போட்டி தொடரில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் 8 அணிகளும் பங்கேற்க முடியாது. ஐசிசி தரவரிசையில் முதல் 4 இடங்களில் உள்ள நாடுகளே இதில் பங்கேற்க முடியும் என்று தெரிகிறது. ஐசிசி நிர்வாகிகள் இதுகுறித்து இறுதி முடிவை எடுப்பார்கள். 



செப்டம்பரில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது. மேலும் 5 நாட்களுக்குள் போட்டி முடிவு எட்டப்படாவிட்டால் 6வது நாளும் போட்டியை தொடர வேண்டும் என்று ஐசிசி ஆலோசகர் பிந்த்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தால் அது போட்டியின் விறுவிறுப்பை கொன்றுவிடும் என்று அவர் தெரிவித்தார்.